புரட்சியாளருக்கு வீரவணக்கம்



இன்று ஏப்ரல் 14 - தாழ்த்தபட்டவர்களின் தலை நிமிர்வு, பிற்படுத்த பட்டோரின் பாதுகாவலன் சட்ட மாமேதை அண்ணல் புரட்சியாளர் டாக்டர் .அம்பேத்கர் பிறந்த நாள் அவர் பிறந்த இந்நாளில் நமக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை என்னும் நோயை அகற்றி தலைவனாய் உயர்வோம் ...
ஆதிக்க சக்திகளின் வெறியினை அடக்கி அம்பேத்கர் வழியில் சாதியை ஒழிப்போம் ...

சாதி ஒழிப்பே ! மக்கள் விடுதலை !

அம்பேத்கர் பற்றிய இந்த பாடலை விடுதலை சிறுத்தைகள் சார்பாக இந்த வலைப்பூவில் உங்களுக்காக வெளியிடுகிறோம் ...


purachinerupin.mp3 -

புரட்சி நெருப்பின் புதல்வன் யாரு? போதி மரத்தின் அறிஞ்சன் யாரு ?
சாதி ஒழிப்பின் தலைவன் யாரு? சமத்துவத்தின் தந்தை யாரு ?
பிறப்பு, வளர்ப்பில் பேதங்களை ஒடைச்தாரு ?
ஒரு பிரளயமாய் எழுந்து வந்த அம்பேத்கர் ! - (புரட்சி நெருப்பின்...)

சமத்துவ பூ மலர சட்டம் வகுத்தவரு!
சாதி மத கொடுமையின் சங்க அறுத்தவரு!
ஆரிய முற்புதர அணலா எரிச்சவரு !
அடிமை சங்கிலியை அடிச்சி ஒடச்சவரு !
ஏழை உரிமை மீட்டெக்க பெருமிடி போல வந்தவரு ! ---
(பிறப்பு, வளர்ப்பில்..புரட்சி நெருப்பின் )

சேரி சனம் உயர சேவகனாய் வந்தவரு!
சீர்திருத்தம் செஞ்சிடவே தியாகம் பல செஞ்சவரு! ---(சேரி சனம் ...)

தீண்டாமை பாவம் கண்டு சினந்து எழுந்தவரு
ஆண்டையின் ஆதிக்கத்தை நொறுக்கி எரிஞ்சவரு !
இந்துத்துவத்தின் இருள் எரிக்க ஒரு எரிமலையாய் நின்னவரு ! --
(பிறப்பு, வளர்ப்பில் )

சேரி வெடி மருந்து கிடங்குன்னு சொன்னாரு !
சீறி வெடிச்ச நாடு தாங்காது இன்னாரு !
இந்து மத வருணத்தை எட்டி ஒதைச்சாரு !
எல்லாரும் சமமுன்னு எடுத்து உரைச்சாரு!
நம்ம வாழ்க்கை இங்கு ஒளிர நல்ல விளகேத்தி வச்சாரு ...
(பிறப்பு, வளர்ப்பில் )






1 கருத்துகள்:

நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)

தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டி
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_08.html

13 ஏப்ரல், 2009 அன்று 9:35 PM comment-delete

கருத்துரையிடுக