ஈழத் தமிழருக்காக தீக்குளித்த சிவானந்தம்

17.04.2009 வெள்ளிக்கிழமை இரவு வடபழனியில் உள்ள மாநிலத் தேர்தல் அலுவலகம் முன்பு சிவானந்தம், ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற அங்கு போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், & ராஜபக்சேவுக்கு எதிரான முழக்கங்களை முழக்கமிட்டவாறே தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

பின்னர் உடல் கருகிய நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனைக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு வந்துச் சென்றனர்.

ஆனால், அங்கு மருத்துவ சிகிச்சை பலனின்றி 17.04.2009 நள்ளிரவு சிவானந்தம் உயிரிழந்தார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக