ஈழத்தில் மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5-வது கட்டப்போர் வெடிக்கும் -திருமா ஆவேசம்
ஈழத்தில் வீர மரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும், களப்பலியான தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்றது.
பெரும் திரளாக கூடி இருந்த விடுதலை சிறுத்தைகள் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது படம் அடங்கிய பாதாகைகளை தாங்கியபடி,"சிங்கள இனவெறியன் ராஜபக்சே ஒழிக ! ஐநா சபையே ராஜபக்சேவை தூக்கிலிடு! இந்தியா அரசே தமிழனத்திற்கு துரோகம் செய்யாதே ! "என்பது போன்ற பல்வேறு முழக்கங்கள் எழுப்பட்டன..
ஊர்வலதில் இந்த சிறுத்தைகள் ஏந்தி வந்த பதாகை அனைவரையும் கவர்ந்துமேதகு பிரபாகரனின் பல்வேறு படங்களை தாங்கி இருந்தது, இடது புறத்தில்புலியையும் வலது புறத்தில் சிறுத்தையும் வரும் படி இருந்தது "ஈழ மக்களைகாப்பதே புலிகள் தான்" - "உணர்வோடு குரல் கொடுப்பது தமிழகத்தில்சிறுத்தைகள் தான் விடுதலை சிறுத்தைகள் தான் " என்ற வாசகம் உண்மையை உணர்த்துவதாக அமைந்தது.
ஊர்வலம் மன்றோ சிலையில் இருந்து புறப்பட்டது. ஊர்வலத்திற்கு விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் தொல் திருமாவளவன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் ராஜபக்ஷே உருவ பொம்மை தூக்கிலிட்டபடி கொண்டு செல்லப்பட்டது.
ஊர்வலம் அண்ணாசாலை வழியாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை சென்றடைந்தது. அங்கு ஈழத்தில் வீரமரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும் களப்பலியான தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவதற்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது.
விடுதலை புலிகள் வீரவணக்கம் செலுத்தும் விதம் போல இதுவரை எந்த மேடையிலும் இல்லாத வகையில் சிறப்பாக அலங்கரிக்கபட்டிருந்தது,மேடையில் பெரிய மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் மலர்வளையம் வைத்து அஞ்சலிசெய்யும் எழுச்சி தமிழர்தொல்.திருமாவளவன்
மேலும் 50 ஆயிரம் தமிழர்கள் இறந்ததற்காக 50 மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது. மலர்களாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொல் திருமாவளவன், வீரவணக்கம் செலுத்தும் வகையில் பெரிய மலர்வளையம் வைத்து, பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
வீரவணக்கம் செய்யும் வகையில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்துகிறார்எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன்
"வீரவணக்கம் வீரவணக்கம் வீரமரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும், களப்பலியான ஈழத்தமிழர்களுக்கும் வீரவணக்கம்." "சாகவில்லை சாகவில்லை, பிரபாகரன் சாகவில்லை" என்று தொல்திருமாவளவன் முழக்கமிட்டார். அதைத்தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று முழக்கம் செய்தனர்.
அப்போது தொல்திருமாவளவன் பேசுகையில்,ஈழ தமிருக்காக எத்தனையோ போராட்டங்களை விடுதலை சிறுத்தைகள் நடத்திவிட்டோம் ,தமிழகத்தில் ஈழ தமிழர் துயரங்களை எடுத்துரைப்பதில் விடுதலை சிறுத்தைகளின் போராட்டங்கள் மக்களை தட்டி உசுபின.
சிறுத்தைகள் மத்தியில் ஆவேச உரையாற்றும் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்
ஊர்வலதில் கலந்து கொண்ட லட்ச கணக்கானசிறுத்தைகள்.உள்படம்:பேரணியை துவக்கிவைத்து உரையாற்றும் கீ.வீரமணிஐயா அருகில் எழுச்சி தமிழர்

ஒரே நாளில் 50 ஆயிரம் பேர்களை கொன்றுவிட்டு உலக மக்கள் பார்வையை மறைக்க பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாக சிங்கள இனவெறியன் கோழைப்பயல் ராஜபக்சே அண்டப்புழுகினான். கடந்த ஜனவரி 2 ந்தேதி கிளிநொச்சி பகுதியை ராணுவம் கைப்பற்றியது என்ற செய்தி அறிந்து மிகவும் துடித்துப்போனேன்.
அன்று முதல் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினோம். தமிழக தலைவர்களை சந்தித்து பேசினேன். ஆனால் அதில் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. ஜனவரி 15 ந்தேதி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினேன். இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்வதாக தலைவர்கள் கூறியதால் உண்ணாவிரதத்தை கைவிட்டேன்.
உயிரையும் ஆயுதமாக்கி வீர மரமடைந்த முத்து குமார் உள்ளிட்ட தியாகிகளுக்கு நான் நடத்திய சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தான் இப்படி ஒரு தாக்கத்தை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. "விடுதலை சிறுத்தைகள் ஆயுதம் ஏந்தாத புலிகள் "
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ ஆகியோரிடம் தனி அணி அமைப்போம் என்று மன்றாடினேன். ஆனால் டாக்டர் ராமதாஸ், வைகோ ஆகியோர் அ.தி.மு.க. அணியில் சேர்வதில் தான் குறிக்கோளாக இருந்தனர். அ.தி.மு.க. தேர்தலுக்கு முன்பு ஈழத்தை ஆதரிக்கவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தலுக்கு பிறகு ஈழத்தமிழர்கள் பற்றி பேசவே இல்லை.
எங்களை கூட்டணியில் சேர்க்க கூடாது என்று காங்கிரஸ் கூறியது. ஆனால் எங்கள் கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது என்று முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அதன்பிறகுதான் நாங்கள் தி.மு.க.கூட்டணியில் இடம் பெற்றோம். தி.மு.க.வோடு கூட்டு சேர்ந்ததில் எந்த குற்றமும் இல்லை. சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்றோம். ஓடுக்கப்பட்ட மக்கள்வாழவும், தமிழர்கள் தலை நிமிரவும் பாடுபடுவேன். ஈழத்தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
தேர்தல் பிரசாரத்திற்காக வந்த சோனியா காந்தியிடம் எப்படியாவது இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள் உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினேன். ஆனால் இலங்கையில் லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். கடைசி நிமிடம் வரை இந்திய அரசு நமது வேண்டுகோளை ஒருபொருட்டாக நினைக்கவில்லை. இலங்கைக்கு சீனா உதவுகிறது. தா.பாண்டியன் போன்றவர்கள் சீனா உதவுவது பற்றி பேசமாட்டார்.
நடேசன், பூலித்தேவன், சார்லஸ் அந்தோணி ஆகியோர் இறந்த பிறகுதான் எம்.கே.நாராயணன் இலங்கை சென்றார். அதற்கு முன் செல்ல எத்தனை முறை சொன்னோம் கேட்கவில்லை.
ஒரு தலைவனை பிடித்து விடுவேன் என்று ராஜபக்சே எல்லா ஈழ தமிழர்களையும் கொன்று குவித்து விட்டான் இப்போதும் அவனால் எங்கள் தலைவனை நெருங்க முடியவில்லை 13,000 சிங்கள ராணுவத்தினரை கொன்று தான் எங்கள் தலைவரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர் .நாங்களும் புலிகள் தான். நாங்கள் பிரபாகரனின் தம்பிகள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5-வது கட்டப்போர் வெடிக்கும் என்று கூறினார்
இதனையடுத்து இந்தியா உள்ளிட்ட 22 உலக நாடுகள் இலங்கை அரசுக்கு அதரவாக ஐநா சபையில் வாக்களித்து உள்ளனர் அவர்களை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறோம் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
பேரணியின் முடிவில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்

1 கருத்துகள்:
ஆம் நிச்சயம் வெடிக்கும்
கருத்துரையிடுக