ஜெயங்கொண்டம் திருமாவளவன் பிரச்சாரம்
ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்தினால் இடம்பெயர்ந்த
மக்களுக்கு வீடு கட்டித்தர நடவடிக்கைகள் மேற்கொள்வேன்.
----- தொல். திருமாவளவன்.
தி.மு.க தலைமையிலான சனநாயக முற்போக்குக் கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று ஜெயங்கொண்டம் சட்டமன்ற 40 க்கும் மேற்பட்ட ஊர்களில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். தொல். திருமாவளவன் மக்களிடையே வாக்குகள் கேட்டு பேசியபோது, ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையப் பணிகளை விரைவு படுத்தப் பாடுபடுவேன் இத்திட்டத்தால் இடம் பெயரும் மக்கள் அனைவருக்கும் கூடுதல் இழப்பீடு பெற்றுத்தர முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இதுவரை, வளர்ச்சித் திட்டங்களினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு எந்த அரசும் வீடுகள் கட்டி கொடுத்ததில்லை. ஆனால் என்னை நீங்கள் வெற்றிபெறச் செய்தால் தமிழக முதல்வருடன், இந்த கோரிக்கையை முன்வைத்து, ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்தினால் இடம்பெயர நேரிடும் அனைவருக்கும் வீடுகள் கட்டித்தர நடவடிக்கைகள் மேற்கொள்வேன்.
1987 - ஆம் ஆண்டு, இடஒதுக்கீடு கேட்டுப் போராடி உயிரிழந்த 25 வன்னிய இளைஞர்களின் குடும்பங்களுக்கு கலைஞர் ஆட்சியில்தான் இழப்பீடாக தலா 3 லட்சம் வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த வன்னிய இன மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என அறிவித்து உரிய இடஒதுக்கீட்டை பெற உதவியவர். தமிழகத்தின் வட மாவட்டங்கள் சிலவற்றில் மட்டும் வாழும் வன்னியர் சமூகத்தில் சார்ந்த வீரபாண்டி, ஆறுமுகம், துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தனது அமைச்சரவையில் முக்கியமான துறைகளைக் கொடுத்து சிறப்புச்செய்திருக்கிறார். அரசு உயர் பதவிகளில் பல வன்னியர்கள் அதிகாரிகளாக நியமனம் செய்திருப்பவர் தமிழக முதல்வர் கலைஞர். எனவே இப்படிப்பட்ட தலைவரான தமிழக முதல்வருக்கு வன்னிய சமூகத்தைச் சார்ந்த வாக்காளர்கள் நன்றி தெரிவிக்கும் வகையில், தி.மு.க கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவையும் அளிக்கின்ற வகையில் எனக்கு ‘நட்சத்திரம்’ சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதுவரை நான் ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசியிருக்கிறேன். ஒரு முறை கூட எந்த சாதியையும் இழிவு படுத்தியோ, பிறர் உணர்வுகள் புண்படுகின்ற வகையிலோ நான் பேசியதாக யாராலும் சான்று காட்டமுடியாது! ஆனால், என்னைப் பற்றி அவதூறான பிரச்சாரத்தை மருத்துவர் இராமதாசு செய்து வருகிறார். ஆவற்றையெல்லாம் நம்பாமல் எனக்கு வாக்காளர்கள் அனைவரும் பேராதரவை, தந்து ‘நட்சத்திரம்’ சின்னத்தில் எனக்கு வாக்களித்து என்னை வெற்றியடையச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பிரச்சாரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், இரவிகுமார், உள்ளிட்ட தி.மு.க விடுதலைச்சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

1 கருத்துகள்:
ஈழம் கிடைத்தால் என்ன, எவன் நாசமா போனா எனக்கென்ன வந்தது என்கிற நிலையில் உள்ள மருத்துவர் ராமதாசின் எண்ணமே திருமா எம்.பி. ஆக விட கூடாது என்று தான் கூட்டணியே மாறினார். இது கூடவா புரியாமல் இருக்கிறோம்.மக்கள் மாடுகளாக இருந்தால் இப்படி பட்ட அரசியல் வாதிகளை என்ன செய்ய முடியும்.ராமதாஸ் வெண்ணை தடவிய கொக்கு என்பது என்றைக்கும் பொருந்தும் தீர்க்கமான சொல்.
கருத்துரையிடுக