எழுச்சி தமிழர் திருமா மாபெரும் வெற்றி....
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் 4,28,516 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பாமக வேட்பாளர் பொன்னுசாமி 3,29,102 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார்.
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் பொன்னுசாமியும், தேமுதிக சார்பில் சபா. சசிக்குமாரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் என்.ஆர். ராஜேந்திரன் மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளன் 99,414 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.
விழுப்புரம் தொகுதியில் நீதி அரசர் சாமிதுரை அவர்கள் 306826 வாக்குகள் பெற்றார் இருப்பினும் 2797 என்ற குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
7 கருத்துகள்:
தோழர் திருமாவுக்கு உடன்பிறப்புகளின் வாழ்த்துக்கள்
திருமாவின் வெற்றி மிகவும் பாராட்டத்தக்கது... ஒரு குரலாவது ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும்!!
அண்ணனின் வெற்றி மகிழ்ச்சியை விட ஆறுதலையே தந்திருக்கிறது. அண்ணனின் வெற்றிக்கு உண்மையாக உழைத்த திமுகவினருக்கு நன்றி. தனக்கான தனித்தன்மையுடன் பாராளுமன்ற பணியாற்ற வாழ்த்துகிறேன்
அண்ணனின் வெற்றி மகிழ்ச்சியை விட ஆறுதலையே தந்திருக்கிறது. அண்ணனின் வெற்றிக்கு உண்மையாக உழைத்த திமுகவினருக்கு நன்றி. தனக்கான தனித்தன்மையுடன் பாராளுமன்ற பணியாற்ற வாழ்த்துகிறேன்
Great! Greetings from Norway!
http://worldtamilrefugeesforum.blogspot.com
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் இந்த சிறுத்தையின் குரல் எதிரொலிக்க என் வாழ்த்துக்கள்.
மருத்துவருக்கு சாட்டையடியும்
திருமாவின் வெற்றியும் மகிழ்ச்சியளித்தது!!
கருத்துரையிடுக