சிறுபான்மை மக்களின் உரிமை மீட்பர்- காயிதே மில்லத் - திருமா புகழாரம்
காயிதே மில்லத் அவர்களின் 114ஆம் பிறந்த நாளான ஜூன் 5ஆம் நாள் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி
தொல் திருமாவளாவன் அறிக்கை
சிறுபான்மை மக்களின் உரிமை மீட்பர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களின் 114ஆம் பிறந்த நாளான ஜூன் 05 அன்று இசுலாமியப் பெருங்குடி மக்களுக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இசுலாமியர்களுக்கும் அனைத்து சிறுபான்மைச் சமூகத்திற்கும் பாதுகாவலராக விளங்கிய அவர், சமூக நல்லிணக்கத்திற்காகவும் சனநாயக பரவலாக்கத்திற்காகவும் ஓங்கி குரல் கொடுத்தவராவார். மேலும் நாடறிந்த நாடாளுமன்றவாதியாகவும் செயல்பட்டு, அடித்தட்டு மக்களின் உரிமைகளை நிலை நாட்டியவராவார்.
இசுலாமியர்கள் என்றால் உருது அல்லது அரபு மொழிகளின் மீது தான் பற்றுதலும் மதிப்பும் கொண்டிருப்பார்கள் என்கிற பொதுவான எண்ணத்தைத் தகர்த்து, தமிழ்த்தாயைப் பெரிதும் நேசித்தார். அத்துடன் இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக தமிழ் மொழியையும் ஏற்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.

மொழி மற்றும் இன நலன்களிலும் மிகுந்த அக்கறை கொண்டவராக விளங்கினார் என்பதை இதிலிருந்து அறியலாம். அத்தகைய பெருமைமிக்க தலைவர் காயிதே மில்லத் அவர்களின் சிறப்பைப் போற்றும் வகையில் ஆண்டு தோறும் சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபடுபவர்களுக்கு தமிழக அரசு அவரது பெயரால் விருது வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் சென்னை, பல்லவன் இல்லம் அமைந்துள்ள இடத்திலிருந்து தீவுத்திடல் வரை அமைந்துள்ள சாலைக்கு காயிதே மில்லத் சாலை என பெயர் சூட்ட வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
காயிதே மில்லத் அவர்களின் 114ஆம் பிறந்த நாளான ஜூன் 5ஆம் நாள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் இரவிகுமார் தலைமையில் பொதுச்செயலாளர் கா. கலைக்கோட்டுதயம், பொருளாளர் முகமது யூசுப் ஆகியோர் முன்னிலையில் காயிதே மில்லத் அவர்களின் நினைவிடத்தில் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
தொல் திருமாவளாவன்
04.06.09

1 கருத்துகள்:
SINGLE M.P THIRUMA AVARGAL PARLIAMENTIL JOLIKA ENGAL VAAZTHUKAL ...
கருத்துரையிடுக