சமச்சீரான வளர்ச்சியை அடைய வேண்டுமென்றால் மின் உற்பத்தியில் தென் மாநிலங்களை புறக்கணிக்கக் கூடாது!

21.07.09 அன்று நாடாளுமன்ற அவையில் மின்சாரத்துறைக்கு நிதி ஒதுக்கும் கோரிக்கை மீதான விவாதத்தின்போது எழுச்சித்தமிழர் அவர்கள் தமிழில் ஆற்றிய உரை

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர்களே, உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மின்சாரத்துறைக்கு நிதி ஒதுக்கும் கோரிக்கை மீதான இந்த விவாதத்தில் கலந்துக்கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பினை வழங்கியமைக்காக அவைத்தலைவர் அவர்களுக்கு எனது நன்றியைத் தொ¢வித்துக்கொள்கிறேன். உலகை இயக்குவதும், ஒளிமயமாக வைத்திருப்பதும் மின்சாரம் என்பதை நாம் நன்கறிவோம். எந்த ஒரு நாடு மின்சார உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறதோ அந்த நாடு பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் வலிமை மிக்கதாக இருக்கிறது. அந்த வகையில் உலக நாடுகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியா பின்தங்கி இருக்கிறது என்பதை நாம் நன்கறிவோம்.

இயற்கை வளங்களும், மின் உற்பத்திக்கான மூல ஆதாரங்களும் நம்மிடத்தில் ஏராளமாக இருந்தும் கூட அதை நாம் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய வகையில் நம்மிடத்தில் உள்ளீடான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கிறது. அதனால்தான் இன்னும் நாம் வளர்ச்சியடையாத நிலையிலேயே, வளரும் முகத்தில் இருந்துக்கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு இநதியாவின் பெரும்பகுதியான குக்கிராமங்கள் லட்சக்கணக்கான குக்கிராமங்கள் மின்சாரத்தையே பார்க்காத கிராமங்களாக பின்தங்கி உள்ளன. இந்தியாவின் பெரும்பகுதி இருண்டு கிடக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த தேர்தலின்போது இந்தியா ஒளிர்கிறது என்று என்று சொன்னவர்களை இந்திய மக்கள் கிராமபுரத்து மக்கள் புறந்தள்ளினார்கள், உதறி எறிந்தார்கள், தூக்கி எறிந்தார்கள். ஏனென்றால் இந்தியவின் பெரும்பகுதி இருண்டே கிடக்கிறது. இந்த நிலையில் நாம் ஒன்றை எண்ணிப்பார்க்க கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம். பெஞ்சமின் பிராங்களின், மைக்கேல் பாரடே, தாமசு ஆல்வா எடிசன் போன்ற மகத்தான விஞ்ஞானிகள் கண்டுபடித்த இந்த மின்சாரம் ஏறத்தாழ 300 ஆண்டுகளை கடந்த பின்னரும் குக்கிராமங்களை எட்டிப் பார்க்காத நிலையில், அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் மிக முதன்மையான கடமையாக இருக்க வேண்டும். அதனடிப்படையில்தான் இந்திய அரசு அனைவருக்கும் மின்சாரம் 'power for all' என்கிற அடிப்படையிலே அந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.

இந்த பதினோராவது அய்ந்தாண்டு திட்டத்துக்குள் அனைவருக்கும் மின்சாரம் என்கிற ஒரு அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அனைத்து தரப்பும், அனைத்து பகுதியும், அனைத்து மனிதர்களும் சேர்ந்து வளர வேண்டும் என்பதற்கான ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பது இந்திய அரசின் கொள்கையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களும் இன்னும் மின்சாரத் தளத்திலேயே-மின்சாரத் துறையிலே வளர்ச்சியடையாமல் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இந்த நிலையிலே இந்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கிறது. மின் உற்பத்திக்கு தண்ணீரை பயன்படுத்தியும், வெப்பத்தை பயன்படுத்தியும், அணு உலைகளை பயன்படுத்தியும் மின்சாரத்தை தயா¡¢ப்பதற்கான பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து இருக்கிறது. அந்த வகையிலே ultra mega power project என்கிற மாபெரும் மகத்தான மின் உற்பத்தித் திட்டங்களை அறிவித்து அந்த திட்டங்களை தமிழ்நாட்டில் செய்யூர் மற்றும் கடலு¡ர் ஆகிய பகுதிகளில் அந்த மின் உற்பத்தி திட்டத்தை கொண்டு வரப் போவதாக அறிவித்து அது அப்படியே கிடப்பில் கிடக்கிறது.

அது மட்டுமில்லாமல், 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது கூடங்குளம் அணுமின் உலை திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இன்னும் அது நிறைவு பெறாத நிலையிலே தேங்கிக் கிடக்கிறது. கால நீட்டிப்பு போய் கொண்டே இருக்கிறது. மேலும் 8000 மெகா வாட் மின் உற்பத்திக்கான ஒரு ஒப்பந்தத்தை ரசுய அரசாங்கத்தோடு இந்திய அரசு போட்டு இருப்பதாகவும் தொ¢கிறது. அது எப்போது தொடங்கப்போகிறது என்பதும் தொ¢யவில்லை. ஜெயங்கொண்டத்திலே மின் உற்பத்தி திட்டம் அறிவிக்கப்பட்டு அதுவும் அப்படியே கிடப்பில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாகும் உணர வேண்டியிருக்கிறது. ஆந்திராவில் கிருஷ்ணா-கோதாவா¢ பேசின் என்று சொல்லப்படக்கூடிய அந்தப் பகுதியிலேயே இயற்கை எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது. மும்பையில் பாம்பே ஹை எனும் இடத்தில் கிடைக்கிற எரிவாயு மிகப்பெரும் அளவில் வடமாநிலங்களில் பயன்படுகிறது. அதைப்போல ஆந்திர பகுதியிலே கிடைக்கிற கிருட்டிணா-கோதாவா¢ பேசின் என்கிற அந்தப் பகுதியிலே கிடைக்கிற அந்த இயற்கை எரிவாயு தென்மாநிலங்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இந்திய அரசு திட்டங்களை தீட்ட வேண்டும். ஆனால் ரிலையன்சு கம்பெனியும், குஜராத் பெட்ரோலியம் கார்பரேசன் என்கிற நிறுவனமும், அரசாங்கத்தை சார்ந்த ongc என்கிற நிறுவனமும் அந்த இயற்கை எரிவாயுவை தயாரிக்கிற பணிகளில் ஈடுபட்டிருக்கின்ற நிலையில் அதற்கான திட்டம் வடமாநிலங்களுக்கு பயன்படக்கூடிய வகையிலே உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ரிலையன்சு, குஜராத், மகாராட்டிரா, மாநிலங்களுக்கு இயற்கை எரிவாயுவை கொண்டு வருவதற்கு குழாய்களை அமைத்து அந்த திட்டங்களை நிறைவு செய்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் தொடக்கத்திலேயே 2007-ம் ஆண்டு நம்முடைய பெட்ரோலிய அமைச்சகம் என்ன ஓப்புதல் அளித்தது என்றால் தென்மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் இந்த இயற்கை எரிவாயு பயன்படக்கூடிய வகையிலே வழங்கப்படும் என அறிவித்திருந்தது. தமிழக முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்கள் பிரதமர் அவர்களை சந்தித்து அது தொடர்பாக முறையிட்டும் கூட இதுவரையில் அதற்கான திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

காக்கிநாடா, நெல்லூர், சென்னை வழியாக குழாய்களை அமைத்து எரிவாயுவைக் கொண்டுபோய் தமிழகத்தில் பயன்படுத்த வேண்டும் என்கிற ஓரு திட்டம் அறிவிக்கப்பட்டதே தவிர அது கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. inclusive growth என்று நம்முடைய பிரதமர் அவர்கள் அறிவித்து இருக்கிறார். நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களும் குறிப்பிட்டு இருக்கிறார். அப்படி "ஒருங்கிணைந்த வளர்ச்சி-சமமான வளர்ச்சி" என்கிறபோது எந்தப்பகுதியும் புறக்கணிக்கப்படக்கூடாது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் ஒரே நேரத்தில் ஒரே மாதி¡¢யாக நடத்தப்படவேண்டும். அனைத்து மாநிலங்களிலும் திட்டமிட்டு இவற்றையெல்லாம் செயல்படுத்தி விநியோகிக்க வேண்டும். எனவே மின்சாரத்துறையில் இன்றைக்கு நெய்வேலி தவிர மிகப்பொ¢ய அளவில் தமிழ்நாட்டில் உற்பத்தி இல்லை. அதற்கான திட்டங்கள் இல்லை. national thermal power corporation , national hydro power corporation ஆகியன அரசாங்கத்தின் நிறுவனங்கள். ஆனால் அவற்றின் மூலமான திட்டங்கள் எதுவும் தமிழகத்தில் இல்லை. எனவே மின் உற்பத்திக்கான திட்டங்களை தமிழ்நாட்டிலும் தென்மாநிலங்களிலும் பரவலாக கொண்டு வருவதற்கு இந்திய அரசு கவனம் செலுத்தவேண்டும். திட்டமிடவேண்டும். நெய்வேலியில் உற்பத்தியாகின்ற மின்சாத்தின் பெரும்பகுதி தமிழ்நாட்டில் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும். அங்கே வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களின் கோ¡¢க்கைகளை நிறைவேற்ற வேண்டும். 5000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்றும், inco serve என்கிற சொசைட்டியில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அது இன்னும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. நெய்வேலி நிலக்கரி திட்டம் நிலக்கரித்துறை அமைச்சகத்தின் கீழ் இருப்பதாக மாண்புமிகு அமைச்சர் சுசில் குமார் சின்டே ஜி அவர்கள் நான் கேட்டப்போது சொன்னார். நிலக்கரித் துறை அமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய நெய்வேலி அனல்மின்நிலையத்தை மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். ஏனென்றால் அது மின் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் மின்சார உற்பத்திக்கான திட்டங்களை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டு வாய்ப்புக்கு நன்றி கூறி அமைகிறேன் .

நன்றி வணக்கம்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக