சார்பில் தாமிரபரணி போராளிகளுக்கு வீரவணக்க அஞ்சலி

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தாமிரபரணி போராளிகளுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தாமிரபரணி போராளிகளுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் குதித்து மூழ்கி இறந்தனர்.

அவர்களது நினைவாக வீர அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் நடைபெற்றது.

இதில்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கா. கலைக்கோட்டுதயம் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை நிலையச் செயலாளர் வன்னியரசு, ஆர்வலன், ஆற்றலரசு, கனியமுதன், கலைவேந்தன், எல்லாளன், பாண்டியம்மாள், தேவி, மோகன், நிதிச் செயலாளர் கிருபாகரன், ஆகியோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக