எழும் ஈழம் - காவல்துறை ஆணையரை சந்தித்தார் திருமா

எழும் தமிழ் ஈழம் இனவிடுதலை மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை மாநகர காவல்துறை ஆணையரைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டார்.

வரும் ஆகஸ்ட் 17ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் எழும் தமிழ் ஈழம் இனவிடுதலை மாநாடாக சென்னையில் நடத்தப்படவுள்ளது.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை இன்று தொல். திருமாவளவன் அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். தான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின் மரியாதை நிமித்தம் ஆணையரை சந்தித்ததாகவும் சென்னையில் நடைபெறும் மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.


--

0 கருத்துகள்:

கருத்துரையிடுக