விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் -திருமா ஆவேசம்
விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க கோரி விடுதலை சிறுத்தைகள் சார்பாக சென்னை மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது ,இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எழுச்சித்தமிழர் முனைவர் தொல் .திருமாவளவன் அவர்கள் ,
"பல ஆண்டுகளாக தமிழக முகாம்களில் ஈழ தமிழர்கள் அடைப்பட்டு கிடகிறார்கள் அவர்களின் குடியிருப்புகள் மிகவும் மோசமாக உள்ளன.துணிச்சேலைகளை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள அக்குடியிருப்புகளிள் அவலங்களோடு அவர்கள் குடும்பம் நடத்தும் நிலை இருக்கின்றது.இதனால் சாதாரண அகதிகள் முகாமில் இருக்கும் ஈழத்தமிழர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அவர்களது குடும்பத்திற்கு தினமும் ரூபாய் 120 ஆக வழங்கப்பட்டுக்கொண்டிருந்த உதவித் தொகையை ரூபாய் 220 ஆக உயர்த்தச் செய்தது விடுதலைச்சிறுத்தைகள் தான். அவர்களது அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள் வைக்கின்றது என்றார்" .
"சாதாரண முகாமில் இருக்கும் மக்களை விட மோசமான நிலையில் இருக்கிறது சிறப்பு முகாமில் உள்ளவர்களின் நிலை.சென்னை அருகில் உள்ள செங்கல்பட்டில் இயங்கி வரும் அம்முகாமில் 85 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்திற்கு தினமும் ரூபாய் 40 மட்டுமே உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. அதைக்கொண்டே அத்தியாவசிய பொருட்களை அவர்கள் வாங்கிக் கொள்ள வேண்டியச் சூழ்நிலை உள்ளது,அவர்கள் வெளியில் வரவும் அனுமதியில்லை. இவ்வாறு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் பொது முகாமுக்கு மாற்ற வேண்டும், அவர்கள் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட வேண்டும்" என்று வலியுறித்தி பேசினார்.
"இதேவேளையில் இந்தியாவுக்கு வரும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவில் சம உரிமை வழங்கப்பட வேண்டும்"
0 கருத்துகள்:
கருத்துரையிடுக