விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி பல்வேறு இடங்களில் கட்சியினர் கொண்டாடினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி பல்வேறு இடங்களில் கட்சியினர் கொண்டாடினர்.

1. தொல். திருமாவளவன் பிறந்தநாளையொட்டி அரக்கோணம் ஆதி திராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கருத்தியல் பரப்பு துணைச் செயலாளர் கா.கௌதம் மாணவியருக்கு இனிப்பு வழங்கினார். வேலூர் மாவட்ட தொண்டரணி துணைத் தலைவர் சந்தன், நிதிச் செயலாளர் செய்யூர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

2. தொல். திருமாவளவன் பிறந்தநாளையொட்டி சென்னை சேப்பாக்கம் 83வது வட்டத்தில் கடம்பன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார். சீராளன், கதிர்வேல், ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

3. தொல். திருமாவளவன் பிறந்தநாளையொட்டி சங்கரன்கோவிலில் திருமா ரத்ததான இயக்கம் சார்பில் அரசு பொதுமருத்துவமனையில் ரத்ததானம் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட கொத்தடிமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைச் செயலாளர் பழனிவளவன் தலைமை தாங்கினார்.

அப்போது தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் படம் பொறிக்கப்பட்ட ஆடைகள் அணிந்து ஊர்வலமாக வந்து ரத்ததானம் வழங்கினர். அரசு மருத்துவர் செந்தில்குமார், வழக்கறிஞர் பரமசிவம், மகளிர் விடுதலை இயக்க மாநகர மாவட்டச் செயலாளர் அமுதாமதியழகன், இளஞ்சிறுத்தை எழுச்சிப்பாசறை மாவட்டச் செயலாளர் குழந்தைவளவன், நகர செயலாளர் குட்டிவளவன், ஒன்றிய செயலாளர் அப்துல் ரகுமான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

4. தொல். திருமாவளவன் பிறந்தநாளையொட்டி நாமக்கல் வேலகவுண்டன்பட்டி இளநகர் புனித மாதா ஆலயத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு மாவட்ட வணிகரணி மாணிக்கவாசகம் தலைமையில் நோட்டுப்புத்தகங்கள், உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டது. இதே போன்று சிவபாக்கியம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியிலும் 75க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சீருடைகள், நோட்டுப்புத்தகம் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

ஊராட்சிமன்றத் தலைவர் கந்தசாமி, கருணை இல்லம் மரியஸ்டெல்லா, மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி செயலாளர் மணிமாறன், சதாசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.

5. தொல். திருமாவளவன் பிறந்தநாளையொட்டி சென்னையை அடுத்த உள்ளகரம் புழுதிவாக்கத்தில் கட்டாரி ராஜேந்திரன், மடிப்பாக்கம் வெற்றி செல்வன் ஆகியோர் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கினர். இதில் சீராளன், இன்பரசு, குமார், மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக