நாக்பூர் தீக்சா பூமியில் எழுச்சி தமிழர்




''இந்துவாக பிறந்தேன், ஆனால் இந்துவாக சாகமாட்டேன்" எனக் கூறிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ல் இந்துக்களின் மிகப் பெரிய விழாவான விஜயதசமியன்று 1 லட்சம் மக்களை திரட்டி நாக்பூரிலுள்ள ஒரு மிகப்பெரிய மைதானத்தில் இந்து மதத்தில் இருந்து வெளியேறி பவுத்த மதத்தை தழுவினர். 1956-டிசம்பர்-6ல் காலமானார். ஆனால் அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாளில் நாக்பூரில் ''தீட்சாபூமியில்'' தன்னெழுச்சியாக மக்கள் திரன்டு அம்பேத்கர் அவர்களின் மணிமண்டபம் மற்றும் கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டிருக்கும் ''அஸ்தி" யை பார்த்து செல்கின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு 50 லட்சம் மக்கள் அங்கு திரன்டதாக நாக்பூரிலுள்ள பத்திரிக்கை செய்தி குறிப்பு கூறுகிறது. இந்த ஆண்டு இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த குழுவானது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தனர். அவரும் 29.9.2009. அன்று கலந்து கொள்வதாக கூறி சம்மதம் தெரிவிதிருந்தார். அதன்படி லண்டனில் நடைபெற்ற ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு அங்கிருந்து புதுடில்லிக்கு வந்து மும்பை சென்று அங்கிருந்து நாக்பூருக்கு விமானம் மூலம் காலை 10.00 மணியளவில் வந்து சேர்ந்தார். கட்சியை சேர்ந்தவர்களும் நாக்பூரைச் சேர்ந்த நிகழ்ச்சி ஒருங்கிைைப்பாளர்களும் அவரை விமானநிலையத்தில் வரவேற்றனர். பின்னர் விமானநிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரம்மாண்டமான அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன்பிறகு புரட்சியாளர் அம்பேத்கர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள ''சின்சோலி'' என்ற இடத்திற்க்கு சென்றார். அங்கே கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் அஸ்தியையும், அம்பேத்கர் பயன்படுத்திய பேனா, தட்டச்சு, இயந்திரம், உடைகள், தடி,உள்ளிட்ட ஏராளமான பொருட்களை பார்வையிட்டார். பின்பு தீக்சா பூமியில் இரவு 7.00 மணியளவில் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் சொற்ப்பொழிவு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் ஆங்கலத்தில் ஆற்றிய உரை இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டது. அவர் பேசியதாவது

1) கொல்லாமை 2) திருடாமை 3) பிறன் மனை நோக்காமை 4) பொய் சொல்லமை 5) மது அருந்தாமை ஆகிய பஞ்சசீலக் கொள்கைகளின் அவசியத்தை எடுத்துரைத்தார். அதன்முலம் அமைதியையும், மகிழ்ச்சியையும் அடையலாம் என்றும் எடுத்துரைத்தார்.அம்பேத்கர் 7 வாரம் மட்டுமே பெளத்த மதத்தில் இருந்தார் இருப்பினும் இந்தியாவில் அவர் செய்த புரட்சி என்பது யாரும் செய்ய முடியாத புரட்சி என்றார். 


இந்நிகழ்ச்சியில் சீனா ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொணடனர்.

-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக