ஆசிரியர்கள் போராட்டத்தில் திருமா
சென்னையில் தமிழ்நாடு இடைநிலை முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மாநில தலைவர் ரத்தினகுமார் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் மனோகரன், சரவணன், அய்யாதுரை , சுந்தர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசுகையில் கடந்த ஜீலை 2ஆம் தேதி கொண்டுவரப்பட்ட சட்டப்படி 50 சதவிகிதம் இடநிலை ஆசிரியர்களுக்கும் 50 சதவிகிதம் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்குவது என்று சட்டம் கொண்டுவரப்பட்டாலும் சில அதிகாரிகள் இச்சட்டத்தை ரத்து செய்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக