எந்த நடிகர் வந்தாலும் விடுதலை சிறுத்தைகளை அழிக்க முடியாது:
எத்தனை நடிகர் கட்சி தொடங்கினாலும் விடுதலை சிறுத்தைகள் வளர்ச்சியை தடுக்க முடியாது, அழிக்கவும் முடியாது என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,
இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கார் மிகப்பெரிய அறிவாற்றல் படைத்த மகான். தந்தை பெரியார், புத்தர், முகமது நபி ஆகியோருக்கு இணையான சிறப்பு பெற்ற அம்பேத்காருக்குத்தான் புத்தருக்கு அடுத்தபடியான ஏராளமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
உலகில் மிகப்பெரிய நூலகம் லண்டனில் தான் உள்ளது. அங்கு இரண்டே 2 தலைவர்களின் படம் தான் வைக்கப்பட்டுள்ளது. ஒருவர் காரல் மார்க்ஸ், மற்றொருவர் அண்ணல் அம்பேத்கார் படம்தான். அப்படிப்பட்ட பெரும் புகழ் படைத்த அம்பேத்காரின் சிலைகளை திறக்கவும், சிலைகள் வைக்கவும், அரசு ஆணை தடுப்பதாக கூறி அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர் தாசில்தார் அலுவலகங்களிலும், காவல் நிலையங்களிலும் கூட அம்பேத்காரின் படத்தை வைப்பதில்லை.
நாம் ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தர்ம சங்கடம் ஏற்படுத்தக்கூடாது என்று எண்ணுகிறோம். எங்களுக்கு நாணயம் உள்ளது. இது நமது மண், நாம் மண்ணின் மைந்தர்கள், இது நமது சேதம், மண்ணுரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்.
சேரி மக்களுக்காக மட்டு மின்றி அனைவருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி தொடர்ந்து பாடுபடும்.
டாக்டர் அம்பேத்கார், தந்தை பெரியார், இரட்டை மலை சீனிவாசராவ், அயோத்தி தாசர் போன்ற தலைவர்களின் வழி காட்டுதலின்படி, அணி திரண்டு போராடுவோம். வருகிற 2011 சட்டமன்ற தேர்தலில் நாம் நமது எழுச்சியை நிலை நாட்டுவோம் என்றார்.
ஏற்கனவே இரண்டு பிரபல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளனர். தற்போது நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பதாக செய்திகள் வெளியாகிறதே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த திருமாவளவன், எத்தனை நடிகர் கட்சி தொடங்கினாலும், விடுதலை சிறுத்தைகளின் வளர்ச்சியை தடுக்க முடியாது. 30 வருஷம் திரைப்படத்தில் நடித்து வந்த நடிகராலும் விடுதலைச் சிறுத்தைகளை அழிக்க முடியாது. இது ஒரு பேரியக்கம். தமிழ் நாட்டில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் மிகவும் அழுத்தமாக வளர்ந்து உள்ளது என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக