தமிழ் மக்களை சொந்த இடங்களுக்கு குடியமர்த்துங்கள் -ராஜபக்சேவிடம் கோரிக்கை

லங்கையில் பல லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.. இவர்களது உண்மை நிலையை கண்டறிய இலங்கை அரசு இதுவரை யாரையும் அனுமதிக்கவில்லை இந்நிலையில் முகாம்களில் வாடும் தமிழர்களை விடுவிக்க கோரியும் அவர்களது சொந்த இடங்களுக்கு குடியமர்த்த வேண்டியும் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஏனைய அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன..


இலங்கையில் உள்ள உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்றும் அங்கு பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அனுப்பி வைக்கவும் இந்திய பிரதமரிடம் கோரிக்கை வைக்கபட்டது..


இந்த பெரும் முயற்சியின் பயனாக பத்து பேர் கொண்ட இந்திய நாடாளுமன்ற உறுபினர்களின் குழு தி.மு.க , காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் அவர்களது சொந்த முயற்சியில் பிரதமரின் அனுமதி பெற்று இலங்கை சென்றனர்..

முகாம்களை பார்வையிட்ட அவர்கள் அதை அறிக்கையாக தமிழக அரசிற்கு சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கின்றனர்..

இன்று இலங்கை அதிபர் ராஜபக்சே அவர்களை சந்தித்த அவர்கள் தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களில் தாமதம் இல்லாமல் உடனடியாக குடியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்..

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமிழர்களின் குடியமர்த்தப்பட வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்..

கன்னி வெடிகளை அகற்றிய பிறகே தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கபடுவார்கள் என்று ராஜபக்சே பதில் சொன்தாக தகவல்கள் கிடைதுள்ளது... ...


0 கருத்துகள்:

கருத்துரையிடுக