இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர் - திருமாவளவன்


லங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டில் பிரிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும் புலம் பெயர்வாழ் தமிழர்களும் ஒன்று பட்டு கூட்டு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கினால் மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பும் உரிமையும் உறுதிப்படுத்தப்படும் என்று இலங்கை வந்துள்ள தமிழக பாராளுமன்ற குழுவின் உறுப்பினரும் விடுதலைச் சிறுதைகள் அணியின் தலைவருமான தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தம்மை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கதறி அழுது கண்ணீர் மல்கி எம்மிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர்.

இலங்கை விஜயம் தொடர்பாகவும் அகதிமுகாம்களில் மக்களின் உண்மை நிலை குறித்தும் விளக்கி தமிழக முதலமைச்சரின் ஊடாக இந்திய மத்திய அரசுக்க அறிக்கையினை சமர்ப்பிப்போம். இதனை விட விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தனியான அறிக்கை ஒன்றினையும் நான் சமர்ப்பிப்பேன் என்றும் அவர் கூறினார்.


வவுனியா முகாமில் உள்ள மக்கள், தமது விஜயத்தின் போது கண்ணீருடன் கதறி அழுது, தம்மை விடுவிக்க வேண்டும் என கோரியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தகவல்களை வெளியிட்டால், இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பாதிப்படையும் என தெரிவித்து, கருத்து வெளியிட தமது குழுவால் தடைவிதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகளுக்கு இடையிலான உறவுகளை கருத்தில் கொண்டு, மக்களின் உண்மை நிலைகளை வெளிப்படுத்தாதிருப்பது தவறானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
.
ந்னறி : வீரகேசரி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக