ஈழத்தமிழர்களின் பாதுகாப்புதான் முக்கியம் - விமானநிலையத்தில் எழுச்சித்தமிழர் பேட்டி

லங்கை முகாம்களில் உள்ள 3.5 லட்சம் தமிழர்களின் வாழ்நிலையை நேரில் கண்டறிய தமிழகத்திலிருந்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.டி.ஆர். பாலு, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், திரு.விஜயன், ஹெலன் டேவிட்சன், காங்சிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதர்சன நாச்சியப்பன், திரு.கே.எஸ்.அழகிரி, ஜே.எம்.ஆருண், சித்தன், உள்ளிட்ட பத்து பேர் கொண்ட குழு இலங்கைக்கு இன்று காலை 12.15 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டனர். இவர்கள் 14-ம் தேதி வரை தங்கியிருந்து அனைத்து முகாம்களையும் பார்வையிட்டு திரும்புவார்கள் என்றும் இக்குழுவிற்கு திரு.டி.ஆர்.பாலு தலைமை தாங்குவார் என்றும் முதலமைச்சர் அலுவலகம் தெரிவிக்கிறது.

சென்னை விமான நிலையத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தாம் இந்தப்பயணத்தில் பங்கு பெற்றிருப்பது தமக்கு ஆறுதல் அளிக்கிறது எனவும் வதைபடும் ஈழத்தமிழர்களை நேரில் சந்திப்பதற்கும் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் தமக்கு கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன் என்றும் தெரிவத்தார். இந்தப்பயணத்தின் முடிவில் முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அவருடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் அடுத்தப் பணிகளை மேற்கொள்ளுவோம் எனவும் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் தங்களின் பாதுகாப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருக்கிறதா என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிிக்கையில் எங்களின் பாதுகாப்பை பற்றி கவலையில்லை அங்கிருக்கும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக