தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கவேண்டும் -திருமா கோரிக்கை

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன்,

சர்வதேச கடல் எல்லையைதாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த 18 மீனவர்களை சிங்கள கடற்படையினர் கடத்திச்சென்றுள்ளனர். சிங்கள கடற்படையினரின் இந்த அட்டூழியம் தொடர்கதையாக நீடிக்கிறது. சிங்கள கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் 1983 ம் ஆண்டில் இருந்து இதுநாள் வரையில் 300 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு முறைகூட இந்திய அரசு சிங்கள் அரசை கண்டிக்கவில்லை. மாறாக சிங்கள அரசுடன் கூடிக்குலவுவதையே கடமையாக கொண்டுள்ளனர்.

சிங்கள அரசை எதிர்க்கும் துணிவு மத்திய அரசுக்கு இல்லை. சிங்கள கடற்படையினரால் கடத்திசெல்லப்பட்ட 18 மீனவர்களை மீட்பதற்காக நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அற்ற நிலை தொடருகிறது. மீனவர்களின் பாதுகாப்புக்காக இல்லாவிட்டாலும், இந்திய இறையாண்மையை பாதுகாப்பதற்காவது மத்திய அரசு அக்கரை காட்டவேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கவேண்டும் என்ற கருத்தை விடுதலை சிறுத்தைகள் நீண்டகாலமாகவே சொல்லி வருகிறது. மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கி அதற்கான பயிற்சியையும் மத்திய அரசு வழங்கவேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக வருகிற பாராளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்புவேன்.

7 ஆண்டுகள் வரை காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.

காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் குறைகளை சுட்டிகாட்டாமல் இருக்கமுடியுமா? காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் இருப்பதை ஏன் மறுபரிசீலனை செய்யவேண்டும். கூட்டணியில் இருந்து விலகும் பிரச்சினையே இப்போது எழவில்லை என்றார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக