இடைத்தேர்தலில் திருமாவளவன் தீவிர பிரச்சாரம்

திசம்பர் 9 திருச்செந்தூர், திசம்பர் 10 வந்தவாசி
இடைத்தேர்தலில் திருமாவளவன் தீவிர பிரச்சாரம்

எதிர்வரும் திசம்பர் 19 அன்று நடைபெறவுள்ள திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்றாலும் மிகவும் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் இரு வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். தி.மு.க. அரசு அடித்தட்டு மக்களுக்காகவும், நடுத்தர மக்களுக்காகவும் ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனால் மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக, அண்மையில் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறையில் இருந்து வரும் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி மிக எளிதானது என்பதை அறிவோம். எனினும் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பது கூட்டணி கட்சி என்கிற முறையில் விடுதலைச் சிறுத்தைகளின் கடமையாகும். ஆகவே, இரு தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அத்துடன், வரும் திசம்பர் 9ஆம் நாள் திருச்செந்தூர் தொகுதியிலும், திசம்பர் 10ஆம் நாள் வந்தவாசி தொகுதியிலும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். விடுதலைச் சிறுத்தைகள் உரிய ஏற்பாடுகளை ஆங்காங்கே கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவண்
திருமாவளவன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக