புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாள்
காலை 9:00 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு எழுச்சித்தமிழர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதைச் செய்தார்.
-
காலை 10:30 மணிக்கு சென்னை அசோக் பில்லர் தொழிலாளர் விடுதலை முண்ணனி சார்பில் ஆட்டோ தொழிலாளர்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சியும், அவர்கள் ஆட்டோ நிறுத்தத்திற்கு மாவீரர் இரட்டைமலை சீனிவாசன் பெயரைச்சூடி பெயர் பலகை திறக்கும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
காலை 11.00, சென்னை ஈக்காட்டுத்தாங்களில் கட்சியின் கொடியேற்றி, புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்க்கு மலர் தூவி மரியாதைச் செய்தார்.
காலை 12.00, சென்னை சைதாப்பேட்டை எம்.சி.இராசா மாணவர் விடுதியிலுள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செய்தார். அங்கு கூடியிருந்த மாணவர்களிடயே உரையாற்றினார்.
மாலை 6:15, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ஒவியர் அணி சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஒவியக் கண்காட்சியை பார்வையிட்டார். இந்திய அரசியல் கட்சிகளில் ஒவியர்களுக்காக தனி அணியைக் கொண்டது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி என்பது சிறப்பம்சமாகும். இந்நிகழ்ச்சியை ஒவியர் அணியின் மாநில துணைச்செயலாளர் வர்மா அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார். தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு ஓவியர்கள் கலந்துகொண்டு அவர்களின் படைப்புகளை எழுச்சித்தமிழரிடம் விளக்கினர் . ஒவியக் கண்காட்சியில் பேசிய எழுச்சித்தமிழர் அவர்கள். தமிழ்நாடு முழுவதிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவியக் கண்காட்சி நடத்தவேண்டும் என ஓவியர்களிடம் கோரிக்கை வைததார்.
மாலை 7:15, தமிழ்நாடு குத்துச்சண்டை கழகம் ஒருங்கிணைத்திருந்த குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பரிசுகளை வழங்கினார்.
இரவு 9:00, கட்சியின் துணைநிலை அமைப்பான இசுலாமிய சனநாயகப் பேரவையின் சார்பில்நடைப்பெற்றது,இதனை கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசப் அவர்கள் ஒருங்கிணைத்தார். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு எழுச்சித்தமிழர் அவர்கள் சுமார் 1.00 மணிநேரம் எழுச்சி உரையாற்றினார். .
செய்தி தொகுப்பு : அகரன் / படங்கள் : ரமணன், அகரன், தமிழ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக