பென்னாகரம் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்: திருமாவளவன்

பென்னாகரம் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கறுப்புடை வீர வணக்க அணிவகுப்பு மற்றும் வெண்மணி போராளிகள் நினைவு நாள் நிகழ்ச்சி செங்கல்பட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய விடுதலைச் சிறுத்தைகளின் கறுப்பு படைப் பேரணி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே வீரவணக்கம் செலுத்தியது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

நடந்து முடிந்த திருச்செந்தூர்,​​ வந்தவாசி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி அரசின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

ஆளும் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் எடுபடவில்லை ​ என்பதை தேர்தல் முடிவு உணர்த்தியுள்ளது.​ கலைஞரின் திட்டங்களில் காப்பீட்டுத் திட்டம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

​ பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி,​​ பென்னாகரம் இடைத்தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜனவரியில் தொடங்கவுள்ள சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன் இடைத்தேர்தலை நடத்தினால் நன்மை பயக்கும்.​ எனவே தேர்தல் கமிஷன் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்.

தி.வ.எழிலரசு தலைமையில் நடைபெற்ற பேரணியை மாவட்டச் செயலர் சூ.க.விடுதலை செழியன்,​​ முனைவர் சு.மகாதேவன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக