அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் - எழுச்சித் தமிழர் வலியுறுத்தல்



சென்னையை அழகு படுத்துகிறோம் என்கிறப் பெயரில் தாழத்தப்பட்ட மக்களை சென்னையிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 14.12.09 அன்று காலை 11.00 மணியளவில் சென்னை மொரியல் அரங்கம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்பாட்டம் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.கட்சியின் மையச் சென்னை மாவட்டச் செயலாளர் க.வீரமுத்து அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். பொதுச்செயலாளர் து.ரவிக்குமார், தலைமைநிலையச் செயலாளர்கள் ஏ.சி.பாவரசு, வன்னியரசு, தலைவரின் தனிச்செயலாளர் கு.பாவலன், கருத்தியல் பரப்புச் செயலாளர் கெளதம சன்னா, ஊடகப்பிரிவின் மாநிலச் செயலாளர் செ.அறிவமுதன், மாவட்டச் செயலாளர்கள் கபிலன், இளஞ்செழியன், விடுதலைச்செழியன், உள்ளிட்ட பல முன்னணி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

நிறைவாகப் பேசிய தொல்.திருமாவளவன் அவர்கள் சிங்காரச் சென்னை என்கிறப் பெயரில் தாழத்தப்பட்ட மக்களை சென்னையிலிருந்து அப்புறப்படுத்தக்கூடாது என்றும், கூவம் நதிக்கரையில் அப்புறப்படுத்திய குடிசை வாசிகளுக்கு சென்னையிலேயே அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்க வலியுறுத்தியும், வீட்டு மனைப்பட்டா இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என கோரியும் பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து மக்களை அழிவு நிலையிலிருந்து காப்பாற்றக் கோரியும், ஆதி திராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில் கழிப்பிட வசதி, சாலை வசதி, சுடுகாட்டு பாதை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டியும், ஆதி திராவி மக்களின் நிலப்பிரச்சனையில் காவல்துறையை ஏவி அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினார்.
-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக