அன்புவழியில் அறவழியில் உலகம் அமைதியைப் பெற உறுதியேற்போம்!
24-12-2009
(தொல். திருமாவளவன்)
...

அன்புவழியில் அறவழியில் உலகம் அமைதியைப் பெற உறுதியேற்போம்!
தொல். திருமாவளவன் கிறித்தவப் பெருநாள் வாழ்த்து!
தொல். திருமாவளவன் கிறித்தவப் பெருநாள் வாழ்த்து!
அமைதியும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வைப் பெற அன்பும் கருணையும்தான் அடிப்படையானவை. ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதும் ஒருவர் மீது ஒருவர் கருணை செய்வதும் மன அமைதியையும் மானுட இன்பத்தையும் நுகர்வதற்கு வழிவகுக்கும். அத்தகைய அறநெறி வாழ்க்கையை ஒவ்வொருவரும் வாழ்ந்துகாட்ட வேண்டுமென்பதற்காக வழிகாட்டிய மகான்தான் ஏசுபெருமான். அவருடைய பிறப்பே உலகத்திற்கு ஒரு மகத்தான மாந்தநேயச் செய்தியாகும். ஆகவேதான் இயேசுபெருமானின் பிறந்தநாளான திசம்பர் 25 அன்று கிறித்தவப் பெருநாளாக உலகமே கொண்டாடி மகிழ்கிறது.
மன அழுத்தங்களிலிருந்தும் ஏய்ப்பிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் மானுடம் விடுதலை அடைய தன் வாழ்வை ஒப்படைத்துக்கொண்டு சிலுவையைச் சுமந்தவர் இயேசுபிரான். அத்தகைய மீட்பரின் அன்பு வழியில் அறவழியில் உலகம் அமைதியைப் பெற அனைவரும் உறுதியேற்போம். கிறித்தவப் பெருநாளில் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
இவண்

1 கருத்துகள்:
தமிழ் பிணம் தின்னும்
சிங்கள ஆரியனையும்,
சாதிப் பிணம் தின்னும்
இந்திய ஆரியனையும் கருவருக்க வந்த இராவண சாமி.
ஈழ மண்னையும்,பெளத்த பூமியையும்
பாபர் மசூதியையும் வென்றெடுக்கும்
புலி வம்சத்து திப்பு சுல்தான் வருகிறான்.
உன் குரல் இடி முழக்கத்தில்
எரிமலை போராளி மால்கம் X பளிச்சிடுவான்.
உன் கருத்துக்குள் பகுத்தறிவாளனின்
வெளிச்சம் உள்ளதால்
உன் சிந்தனையில் சமுக நீதி காக்கும்
பெரியார்.
தம்பிகள் எல்லோரும் மறந்தாலும்
ஆரிய மாயை கொழுத்த வந்த எங்கள்
அன்னாவின் பேரன் நீ.
தமிழ் சேரி வாழ் சிங்கங்களின் அன்னல்
அம்பேத்கார் நீ.
சாத்திரம் சொன்ன பார்பண
சூத்திரகாரனை,
அழிக்க புரட்சி தீ ஒன்னு வருகுது!
நாடளும் கோட்டைக்குள் பதுங்கி
ஒழிந்தாலும் விடாது இந்த
கருப்பு சிருத்தை!
அதன் பின்னால் வரும்
உணர்வு கொண்ட லட்சம் புலிகள்!
கருத்துரையிடுக