இலங்கையில் எழுச்சித்தமிழர் சந்திரசேகரனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
இலங்கைக்கு நேரில் வருகைதந்த இவர் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை சந்திரசேகரனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் எழுச்சித்தமிழர் அவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் அவர் தெவித்திருப்பதாவது:-
தமிழ் மக்கள் விடுதலை பெறவேண்டும் என்பதில் தீராத வேட்கை கொண்டவரும் கொள்கையில் தெளிவும் போர்க்குணத்தில் உறுதியும் கொண்டவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரனின் இழப்பு தமிழர் விடுதலைக் களத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் இலங்கை சமூக அபிவிருத்தித்துறை அமைச்சருமான பெ. சந்திரசேகரன் திடீரென காலமாகிவிட்டார் என்பது பெரும் அதிர்ச்சியையும் தாங்கிக்கொள்ள முடியாத துக்கத்தையும் அளிக்கிறது.
மலையக பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களான தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட அவன் மறைவு, ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.
தமிழீழம் விடுதலை பெறவேண்டுமென்பதிலும் தீராத வேட்கை கொண்டிருந்தார். அண்மையில் சுவிஸ் நாட்டில் நடந்த உலகத் தமிழர் கலந்தாய்வுக் கூட்டத்திலும் கலந்துகொண்டு, தமிழினத்தின் மீட்சிக்கான ஈடுபாட்டை வெளிப்படுத்தினார்.
கொள்கையில் தெளிவும் போர்க்குணத்தில் உறுதியும் கொண்ட அவருடைய இழப்பு, தமிழர் விடுதலைக் கழகத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எமது வீர வணக்கம்.











0 கருத்துகள்:
கருத்துரையிடுக