தொல்.திருமாவளவன் கவிதைகள் வெளியீட்டு விழா

சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் 5/1/2010 அன்று மாலை 6 மணியளவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களால் 1981ல் இருந்து இதுவரை அவர் எழுதிய கவிதைகளை தொகுத்து முதல் பாகமாக தொல்.திருமாவளவன் கவிதைகள் என்னும் பெயரில் நூல் வெளியிடபட்டது

இந்த நிகழ்விற்கு மக்கள்பாவலர் இன்குலாப் தலைமை வகிக்க வன்னிஅரசு வரவேற்புரை அளிக்கதொல்.திருமாவளவன் கவிதைகள் நூலை உணர்ச்சிப்பாவலர் அய்யா காசி ஆனந்தன்வெளியிட , எழுச்சிப்பாவலர் தணிகை செல்வன் நூலினை பெற்றுக்கெண்டார்.

எழுத்தாளர் துரை.ரவிக்குமார் . கவிஞர்கள் பழநிபாரதி, கபிலன், யுகபாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொல்.திருமாவளவன் ஏற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியினை கவிஞர் இளயகம்பன் தொகுத்து வழங்கினார். நீல. தமிழேந்தி நன்றியுரையாற்றினார்.

எழுச்சித்தமிழரின் நூல் வெளியீட்டு விழவை பங்கேற்பதற்காக தமிழ் நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கண‌க்கான விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்

உணர்ச்சிப்பாவலர் காசிஆனந்தன் அவர்கள் எழுச்சித்தமிழர் கவிதைகளை பற்றியும் ஈழத்தில் நம் சொந்தங்கள் படும் அவலங்களையும் ,மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பதகவும் மீண்டும் அங்கு ஈழ‌போர் வெடிக்கும் என உரையாற்றினார்.




எதிரணியில் இருந்துக்கொண்டு எது வேண்டுமானாலும் பேசிவிடலாம். ஆனால் கூட்டணியில் இருந்துகொண்டு நாடாளுமன்ற அவையில் தன்னுடைய கன்னிப்பேச்சிலேயே ஈழத்தமிழர்களுக்கு ஆதராவாகவும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியா துரோகம் இழைத்து விட்டது. என்றும் கூறினேன். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் தான் கொண்ட கருத்தியலிருந்து சமரசம் செய்து கொள்ளாமல் துணிச்சலோடு இந்தக் கட்சியினை வழிநடத்திக் கொண்டிருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார். தீவிரவாதம் தீவிரவாதத்தால் அழிந்தது என்கிறார்கள் மூடர்கள் அப்படியானால் ராஜிவ்காந்தி எதனால் எப்படி அழிந்தார். அவர்கள் கூற்று உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதுவும்கூட ஏன் உண்மையாக இருக்கக்கூடாது என்று வினா எழுப்பினார். தனி தமிழீழம் அமையும் வரையில் விடுதலைச்சிறுத்தைகள் தமிழகத்தில் விடுதலை புலிகளாகவே செயல்படுவோம் , ஈழத்தை யாரும் ஆதரித்தாலும் ,ஆதரிக்காமல் போனாலும் விடுதலைச்சிறுத்தைகள் அடுத்தகட்ட போராட்டங்களை மேதகு.பிரபாகரன் அவர்களின் தலைமையில் முன்னெடுத்துசெல்லும் என எழுச்சித் தமிழர் உரையாற்றினார்.

...

1 கருத்துகள்:

good do it

7 ஜனவரி, 2010 அன்று 4:59 AM comment-delete

கருத்துரையிடுக