திரு.வேலுபிள்ளை அவர்களின் உடலுக்கு தொல்.திருமாவளவன் நேரில் அஞ்சலி




தமிழீழ தேசியத்தலைவரின் தந்தை திரு.வேலுபிள்ளை அவர்களின் இறுதிநிகழ்வில் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்பு சென்றடைந்தார்.


இன்று பிற்பகல் திருவில் சதுக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ள திரு.வேலுபிள்ளை அவர்களின் உடலுக்கு தொல்.திருமாவளவன் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார் ..நாளை வல்வெட்டித்துறையில் உள்ள மயானத்தில் நடைபெறும் இறுதி நிகழ்விலும் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்துகிறார்.

இறுதி நிகழ்வை முடித்து கொண்டு திங்கள் கிழமை சென்னை திரும்புகிறார்...

-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக