'இந்தியதேசியத்திற்கு மாற்று தமிழ் தேசியம்தான்' - எழுச்சித்தமிழர் பேச்சு

27.02.10 சனிக்கிழமை அன்று சென்னையிலுள்ள தேவ நேய பாவாணர் அரங்கத்தில் தாய்மண் வெளியீட்டகம் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்,திருமாவளவன் தலைமையில் திரு தணிகைச்செல்வன் அவர்களின் நுால்கள் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்தவர்களை திரு.நீல.தமிழேந்தி வரவேற்று சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தோழர் வன்னியரசு அவர்கள் பதிப்பாளர் உரை நிகழ்த்திய பின் \'தமிழினதிரட்சியும் தாயக மீட்சியும்\' எனும் அரசியல் நூலை மூத்த பத்திரிகையாளராகிய திரு.சின்னக்குத்தூசி அவர்கள் வெளியிட பேராசிரியர் சுபவீரபாண்டியன் பெற்றுக்கொள்வதாக இருந்து அவர் நிகழ்ச்சிக்கு வர இயலாததால் திரு. வா.சே.குழந்தைசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்.




இந்த அரசியல் நூலை வெளியட்ட திரு.சின்னக்குத்தூசி பேசுகையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் இந்த நூலை வாங்கிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து \'புறப்படல் கோரும் புறப்பாடல்\' எனும் கவிதை நூலை பெற்றுக்கொண்ட இனமான பாவலர் திரு.அறிவுமதி அவர்கள் உணர்வு பூர்வமாய் பேசியது நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் உள்ளத்தை கணக்க வைத்தது. திருமா என்றொரு தலித் தலைவன் தமிழநாட்டின் முதல்வராய் வரவேண்டும் என மிகவும் ஆதங்கப்பட்டு பேசினார். அறிவுமதி குறிப்பிட்டு கூறுகையில் சென்னை மாநகரில் மார்வாடிகள் எல்லாம் மாட மாளிகைகளில் வாழும்போது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அம்மக்களின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைச்சிறுத்தைகளுக்கு நூறடிச் சாலையில் அலுவலகம் இல்லை என கூறிவிட்டார்கள். நாம் ஒவ்வொருவரும் பத்து ரூபாயாவது போட்டு சேர்த்து சென்னையில் முக்கிய இடத்தில் ஒரு அலுவலகம் வாங்க வேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து \'கற்பு எனப்படுவது\' எனும் இலக்கிய நுலை எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட்டார் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உண்மையான காதல்தான் கற்பு என்ப்படுவது என்று கூறினார்.

இரா.ஜவகர் அவர்கள் தேசியமும் மார்க்சியமும் எனும் நுாலை வெளியிட்டு மிகச்சிறப்பான வகையில் நுாலை ஆய்வு செய்து பல அரிய தகவல்களை கூறினார். இந்த ஆய்வு நுாலில், மார்க்சியம் காங்கிரசு கருவிலிருந்து வந்தது என குறிப்பிட்டுள்ளது என்று கூறியதும் அவையில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர். ஆனால் அது தவறான மேற்கோல் என் குறிப்பிட்டு மார்க்சியம் தோன்றிய நாள் அதன் முதற் கூட்டம், அது நடைப்பெற்ற இடம் தேதி என அனைத்து விவரங்களையும் வெளியிட்டு ஆதாராமாய் வெளியிட்டார். நிகழ்ச்சிகளை கவிஞர் இளைய கம்பன் மிக நேர்த்தியாக தொகுத்து வழங்கினார். நன்றியுரை கூறுவதற்கு முன் நுால்களை எழுதிய திரு.தணிகைச்செல்வன் தமது ஏற்புரையில் இரு கரங்களை தலைக்கு மேல் துாக்கி விடுதலைச்சிறுத்தைகளுக்கும் அதன் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் இந்த நுல்களை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டதற்கு நன்றி கூறினார். வெளியீட்டு மையத்தின் மாநிலச் செயலாளர் ஆதிரை அவர்கள் நன்றியுரை கூறினார்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய எழுச்சித்தமிழர் தம் உரையில் குறிப்பிட்டதாவது.

தாய்மண் வெளியீடு இதுவரை இயக்கம் சம்மந்தமான நுால்களை வெளியிட்டு வந்தது. இப்போது முதல்முறையாக மற்ற எழுத்தாளர்கள் நுால்களை வெளியிடுகிறது. இந்த வரிசையில் முதலாவதாக திரு.தணிகைச்செல்வன் நுால்களை வெளிடுவதில் பெருமைகொள்கிறது. திரு தணிகைச்செல்வன் விடுதலைச்சிறுததைகளின் களப்பணிகளை உற்று கவனித்து நம்மை தேடி வந்து ஊக்கப்படுத்தி அங்கிகரிக்ககூடிய மார்க்சிய சிந்தனையாளர் மற்றும் நம் போராட்ட நிகழ்வுகளில் பங்கேற்று நம்முடன் ஒன்றாக கலந்தவர். இதனால் தணிகைச்செல்வன் எழுதிய நுால்களை நாங்களே வெளியிடுகிறோம் என்று கேட்டு அச்சடித்து தேதி குறித்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்து.

எங்களின் முதல் வெளியீடாகிய தணிகைச்செல்வன் நுால்களுக்கு பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி பழம்பெரும் எழுத்தாளர் சின்னக்குத்துாசி மற்றும் பலர் கலந்து சிறப்புரையாற்றியது எங்களுக்கு பெரும் பேராக கருதுகிறோம். நானும் தணிகைச்செல்வனும் பேசும்போது தலித்தியம் என்ற சொல்லை சாதிய அடிப்படையில் ஏன் பார்க்கிறார்கள் தலித் சாதி அல்ல தலித் என்பது பாடடாளி வர்க்கம்தான் தலித் என்பது சிறுபான்மையினர், பெண் உரிமை கேட்பவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள், உழைப்பவர்க்ள இவர்களுக்கு தலைமை ஒரு தலித் தலைவர் வேண்டும் விடுதலைச்சிறுத்தைகளின் தொடக்க காலங்களில் சாதி ஒழிப்பும் தமிழ் தேசியமும் என்ற இரட்டை கருத்துகளைதான் முன்வைத்து கூறி வந்தோம். தமிழ் தேசியம் என்பது சாதி ஒழிப்பை மையப்படுத்தியது தான் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தமிழ்தேசியம்தான தீர்வாக முடியும். புரட்சியாளர் அம்பேத்கர் இந்துத்துவத்தைக வேரறுக்க வேண்டும் என்றார். ஏென்றால் இந்துத்துவம்தான் இந்தியாவை நடத்துகிறது. அது எப்படி என்றால் இந்துத்துவம் இந்து மதத்தை பாதுகாக்கிறது. இந்து மதம் சாதியை பாதுகாக்கிறது. இந்துதுவத்தை வேரறுக்க தமிழ்தேசியம்தான தீர்வாக முடியும் தலித் தலைமை என்பது பாட்டாளி வர்க்க தலைமை, பொதுவுடைமை தலைமை, தமிழ்தேசிய தலைமையாகும்.

தலித் என்பவர் பிறவி பொதுவுடைமைவாதி. அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளையும் தள்ளிவிட்டு விடுதலை பெறத் துடிக்கும் பொதுவுடைமைவாதி. தலித்துகளை சாதியாய் பார்ககும் நிலை மாற வேண்டும். இந்த வழியில்தான் தாய்மண் பதிப்பகமும், கரிசல் பதிப்பமும் அரிய பல நுால்களை வெளியிட்டு வருகிறது. தமிழ் தேசியம் , சாதி ஒழிப்பு, தலித் விடுதலை, பெண்விடுதலை உள்ளிட்ட சமூக மாற்றத்திற்கான நுால்கள், அடித்தட்டு மக்களின் நலன்களுக்கான எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், சிந்தனையாளர்கள் இலக்கிய படைப்பாளிகள், கலைஞர்கள், அனைவரையும் வரவேற்கிறது எங்களின் தாய் மண் பதிப்பகம் என கூறி முடித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக