அடுத்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 15 சதவீத ஓட்டுகள் கிடைக்கும்: திருமாவளவன் பேச்சு

காயிதேமில்லத்தின் 115-வது பிறந்தநாளையொட்டி சென்னை புதுப்பேட்டையில் இஸ்லாமியர் அரசியல் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-
கண்ணியத்திற்கு பெயர் பெற்றவர் காயிதே மில்லத். அவர் சமூக வழிகாட்டி. பிறர் கண்ணியத்தை காப்பாற்றி தன் கண்ணியத்தையும் காப்பவர்.
இந்தியாவில் காங்கிரசுக்கு உயிர் இருக்கிறது என்றால் அது தலித் மற்றும் சிறுபான்மையின முஸ்லீம் மக்களால்தான். அவர்களின் ஓட்டுக்களால்தான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வினருக்கு இவர்கள் வாக்களிக்கமாட்டார்கள். அதனால் தமக்குத்தான் ஓட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது.
அதனால்தான் இஸ்லாமிய, தலித், சிறுபான்மையின மக்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இந்த மக்கள் அனைவரும் அரசியல் சக்தி யாக உருவெடுக்க வேண்டும்.
அரசியலில் நுழைந்துள்ள ஊழலை தடுக்க வேண்டுமானால் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறையை கொண்டு வரவேண்டும்.
இந்த முறை வந்தால் சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும். ஊழல் குறையும். விடுதலை சிறுத்தைகள் எழுச்சி பெறுவதை கண்டுதான் மற்ற கட்சிகளில் உள்ள தலித்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
நமது நாட்டில் விகிதாச்சார முறைதான் வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. விஜயகாந்த் கட்சி 200 தொகுதிகளில் போட்டியிட்டு 8 சதவீத வாக்கு வங்கியை பெற்றது. கட்சி ஆரம்பித்தவுடனேயே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட பொருளாதார வசதி அவரிடம் உள்ளது.
ஆனால் எங்களிடமோ அது இல்லை. தினமும் உழைத்து கூலி வாங்குபவர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளி, சாதாரண மக்களை கொண்டு கட்சிகளை நடத்தி வருகிறோம்.
அடுத்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 200 தொகுதிகளில் போட்டியிட்டால் கண்டிப்பாக 15 சதவீத வாக்கு வங்கியை பெறும் என்று உறுதியாக சொல்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பா. ஆர்வலன், வன்னி யரசு, ரகுமான், ஜெ. முபாரக், குலாம் முகைதீன், முத்து முகமது, ஞான. திலகர் உள்பட இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையினர் பலர் கலந்து கொண்டனர்.
1 கருத்துகள்:
இஸ்லாமியர்களுக்காக ஒரு. விடுதலை சிறுத்தை இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையை துவங்கி தந்த அண்ணன் திருமா அவர்களுக்கு ந்ன்றி
SM SHARIF
CELL 8870765488
கருத்துரையிடுக