அஜீத், ரஜினிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்


ஜாக்குவார் தங்கம் வீடு மீது தாக்குதல் நடிகர்கள் அஜீத், ரஜினிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம் தொல். திருமாவளவன் அறிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்பட சண்டை இயக்குநர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதில் ஜாக்குவார் தங்கம் அவர்களின் மனைவி காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இந்த வன்முறையை நடத்தியுள்ளது. அண்மையில் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் நடிகர் அஜீத் இத்தகைய விழாவுக்கு வரும்படி சிலர் மிரட்டுகின்றனர் என்று முதல்வர் முன்னிலையிலேயே பேசினார். அவ்வாறு அஜீத் பேசியதற்கு ஜாக்குவார் தங்கம் தம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதற்காக அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் காவிரிநீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல், ஈழத் தமிழர்ச் சிக்கல் உள்ளிட்ட தமிழின பிரச்சனைகளுக்காக திரைப்படத் துறையினர் தன்னியல்பாக வெகுண்டெழுந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான போராட்டங்களின்போது ஒரு சில நடிகர்களும் நடிகைகளும் தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதும் புறக்கணிப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் மண்ணில், தமிழ் மக்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் தம்மை வாழ வைக்கும் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறபோது அத்தகைய போக்குள்ளவர்களை கண்டிப்பதும் சுட்டிக் காட்டுவதும் இயல்பானதுதான். அதனை மிரட்டுவதாகச் சொல்லி திசை திருப்புவது மேலும் உணர்வை இழிவுபடுத்துவதாகும். நடிகர் அஜீத் போன்றோரின் பேச்சு, தமிழர்களுக்கான போராட்டங்களிலும் விழாக்களிலும் பங்கேற்க விருப்பம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

குறிப்பாக, மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், தம்மை மிரட்டி அழைத்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் அஜீத்தின் போக்கு உள்ளது என்பதையே அறியமுடிகிறது. விழாவுக்கு நிதி தாருங்கள் என்றா மிரட்டினார்கள். விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும்? இதை ஊதிப் பெருக்கிப் பிரச்சனையாக்கியது மட்டுமல்லாமல், ஜாக்குவார் தங்கம் வீட்டையும் தாக்கி அவரது மனைவியைக் காயப்படுத்துவதற்கு உடந்தையாய் இருப்பது கண்டனத்திற்குரியது.

இத்தகைய சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட நடிகர் ரஜினி, அஜீத் ஆகியோர் அறிக்கை வெளியிடவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறான செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதுதான் நாகரிக அணுகுமுறையாகும். ஆனால் அவ்வாறு அறிக்கை வெளியிடுவதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதிலிருந்து அவர்களது உள்நோக்கம் புரிகிறது. தமிழகத்தில் தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது.

இவண்
(தொல். திருமாவளவன்)
-



குறிப்பு :- இது தொடர்பாக பாதிக்கபட்ட ஜாக்குவார் தங்கம் அவர்களை விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நேரில் சந்தித்து இது குறித்து விவாதித்தார் பின்னர் காயப்பட்ட அவரது மனைவியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

3 கருத்துகள்:

திருமா அண்ணனுக்கு வணக்கம், விடுதலை சிறுத்தைகள் என்ற அமைப்பின் மீதும் அதன் அரசியல் மீதும் திருமா அண்ணனின் செயல்திறன் மீதும் நம்பிக்கையோடிருக்கும் தம்பிகளில் ஒருவன்...

அஜீத்தை முன்னிறுத்தி கருணாநிதி நடத்திக்கொண்டிருக்கும் கேவல அரசியலில் விசி அமைப்பும் திருமா அண்ணனும் சிக்க வேண்டாம்...

அஜீத் தாங்கள் மிரட்டப்பட்டது என்று கூறியதில் தவறேதுவும் இல்லையே, நடிகர்களை விழாவுக்கு கூப்பிட்டு அவர்களின் முகத்தை படம் பிடித்து அதை அவர்களின் தொலைக்காட்சியில் வெளியிட்டு காசு பார்க்கத்தானே துடிக்கிறார்கள்...

அஜீத்தோ அல்லது மற்ற சில நடிகர் நடிகைகளோ தமிழ் தமிழென்று பேசுவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி கேமராவுக்கு வெளியேயும் நடித்துக்கொண்டு தமிழனுக்கு ஒரு போராட்டமென்றால் ஓடிப்போய் ஒளிந்து கொள்வதோ அதை கலைப்பதோ இல்லையே, நிதர்சனத்தில் நாம் கண்டிக்க வேண்டியது அம்மாதிரியான நடிகர்களை தான்... அஜீத் போன்றோர் எதற்க்குமே வருவதில்லை, இதற்க்கும் வருவதில்லை....

அஜீத் ஏன் வரவேண்டும்?? எல்லோருக்கும் அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் இருக்க வேண்டிய அவசியம் இல்லையே, அப்படி இல்லாதவர்களை ஏன் வற்புறுத்த வேண்டும். அது மட்டுமின்றி அஜீத் எதிர்ப்பு தெரிவித்ததின் பிண்ணனியாக திரைப்பட கலைநிகழ்ச்சி பாராட்டுவிழாக்களுக்கு வந்தாக வேண்டுமென்று மிரட்டப்படுவதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன... இவர்கள் தொலைக்காட்சியில் போட்டு சம்பாதிக்க ஏன் நடிகர்கள் சிரமப்படவேண்டும்.

ஜாக்குவார் தங்கத்தின் பிண்ணனி என்ன? ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அனாமிக்கா என்ற நடிகையை கற்பழித்ததாக வழக்கு போடப்பட்டுள்ளது... மேலும் அஜீத் அவர்களின் ரசிகர்களால் தாக்கப்பட்டதாக சொல்வதில் அவர் ஒரு கதை சொல்கிறார் அவர் பையன் ஒரு கதை சொல்கிறார் அவர் மனைவி வேறொன்று சொல்கிறார் டிவிக்களில்.

அழித்துவிடுவோம் என்று மிரட்டுகிறார் வி.சி.குகநாதன், கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் ஏன்கிறார்... இவர்கள் டிவியில் முகத்தை காண்பித்து காசு சம்பாதிக்க நடிகர்கள் ஏன் கட்டுப்படவேண்டும்? அத்துமீறு அடங்கமறு என்று அதிகாரத்துவத்துக்கு எதிராக லேசாக அஜீத் முனகியதற்க்கே இத்தனை சலசலப்புகள்...இத்தனைக்கு அஜீத் பொதுநலமாக பேசவில்லை சுயநலமாக தான் பாதிக்கப்படுவதை தான் பேசியிருக்கார், ஒரு சொறிநாயை கூட யாரேனும் கல்லெறிந்தால் திரும்ப குலைக்கதான் செய்யும், அப்படியான ஒரு லேசான எதிர்ப்பு குரல்தான் அஜீத்தின் அந்த முனகல். ஆனால் அதை தமிழர் போராட்டத்துக்கு எதிராக அஜீத் கூறியதாகவும் ஜாதி பிரச்சினையாகவும் ஆக்கும் சிலரின் சில்லறை அரசியலுக்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு பலியாகக்கூடாது...

நான் எந்த திரைப்பட நடிகனின் ரசிகனுமல்ல, இன்னமும் கேட்டால் நடிகர்களின் நடிப்பை தாண்டிய கேவலமான அரசியலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிப்பவன்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு இம்மாதிரியான சில்லறை விசயங்களில் கவனத்தை சிதறவிடாமல் ஒடுக்கப்பட்ட நம் மக்களின் எழுச்சிக்கும் அரசியலுக்கும் தொடர்ச்சியாக குரல் எழுப்ப வேண்டுகிறேன்.

இந்த தளத்தின் நிர்வாகி அவர்களே, இதை திருமா அண்ணனின் கவனத்திற்க்கு கொண்டு செல்லுங்கள்

அன்புடன்
குழலி
சிங்கப்பூர்

20 பிப்ரவரி, 2010 அன்று 7:47 PM comment-delete

VERY NICE

21 பிப்ரவரி, 2010 அன்று 6:49 AM comment-delete

Thiruma ANNA....

100 Percent i accpet the singapore Kuzhali statement..wht i thought in my mind Kuzhali hav mentioned clearly and detaily...Pls dont stand in back side of cine actress....Wht ajith told is good statment...Example .today vijay kanth..tomorrow Vijay...future Simbu....thats the todays political situtaion in tamil nadu..
so pure great poitician lik Thol ANNA....pushed backward...
so we should not allow this kind of thigs to happen...
Pls we hav to follow VCK goals and helping public specially backward ppl....we belive in ur path and join hand with you for develpoment of VCK and growth of tamil nadu ppl...

regads

kurral bharathi.C
qatar..

hai
19 ஏப்ரல், 2010 அன்று 3:45 AM comment-delete

கருத்துரையிடுக