தமிழகமெங்கும் முத்துக்குமார் பாசறை தொடங்கப்படும்:தொல். திருமாவளவன் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகமெங்கும் "முத்துக்குமார் பாசறை' தொடங்கப்படும்!

முத்துக்குமார் குடும்பத்திற்கு நிதியளித்த நிகழ்வில்
தொல். திருமாவளவன் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், கரும்புலி முத்துக்குமார் நினைவு நாளான சனவரி 29ஆம் நாளை "தமிழகக் கரும்புலிகள் நாள் என்று அறிவித்துள்ளதோடு, "கரும்புலி முத்துக்குமார் பாசறை'யையும் தொடங்கியுள்ளார்

இது குறித்த விவரம் வருமாறு :-

இன்று 13.02.2010 காலை 11 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கொளத்தூரிலுள்ள வணிகர் சங்கக் கட்டடத்தில் கரும்புலி முத்துக்குமார் குடும்பத்தினரைச் சந்தித்தார். அப்போது அக்குடும்பத்தின் பாதுகாப்பு நிதியாக ரூ. 2 லட்சத்தை முத்துக்குமாரின் சகோதரி தமிழரசியிடம் அளித்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடையே பேசும்போது, ""ஒவ்வோர் ஆண்டும் முத்துக்குமாரின் நினைவு நாளான சனவரி 29ஆம் நாளை "தமிழகக் கரும்புலிகள் நாளாக' விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எழுச்சியுடன் கடைப்பிடிக்கும். அத்துடன் கரும்புலி முத்துக்குமாருடைய தமிழீழ விடுதலைக்கான அர்ப்பணிப்பை தமிழகத்தில் பரப்பும் வகையில் "கரும்புலி முத்துக்குமார் பாசறை' என்ற அமைப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடங்குகிறோம். இந்த அமைப்பு தமிழ்நாடு முழுக்க முத்துக்குமாருடைய கொள்கைகளைப் பரப்பும். கரும்புலி முத்துக்குமாரைத் தொடர்ந்து வீரச்சாவடைந்த தமிழகக் கரும்புலிகள் அனைவரின் குடும்பத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக பாதுகாப்பு நிதி வழங்கப்படும்'' என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் கா.கலைக்கோட்டுதயம், தலைமை நிலையச் செயலாளர் வன்னிஅரசு, இரா.செல்வம், மாவட்டச் செயலாளர்கள் கபிலன், வீரமுத்து, உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
-

2 கருத்துகள்:

Ezhuchi Thamizhar Thol.Thirumavalan avargal thazhthapattorin ooyir muchi...

Kumaran.

17 பிப்ரவரி, 2010 அன்று 2:27 AM comment-delete

Ezhuchi thamizhar.thol. thiruma avargal odukka pattorin ooyir muchi....

17 பிப்ரவரி, 2010 அன்று 2:29 AM comment-delete

கருத்துரையிடுக