பத்மபூஷன் விருது பெற்ற இசைஞானி இளையராஜா அவர்களை திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து


இசைஞானி இளையராஜா அவர்களுக்கு சமிபத்தில் இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான "பத்மபூஷன்" வழங்கபட்டது. இது தொடர்பாக எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்கள் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி பின்னர் முதல்வர் உள்ளிட்ட பலரையும் சந்தித்து பேசினார்..

இந்நிலையில் விருது பெற்ற இசைஞானி இளையராஜா அவர்களை தொல். திருமாவளவன் அவர்கள் நேரில் சந்தித்து பேசினார்



சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிகழந்த இந்த சந்திப்பின் போது, இருவரும் பலதரப்பு விடயங்களை கலந்து பேசினர்.

இந்த சந்திப்பின் போது பாவலர் திரு.அறிவுமதி, தலைமை நிலைய செயலாளர் திரு.வன்னியரசு, மும்பை தமிழ் சங்கத்தின் தலைவர் திரு,குமணன் ராஜா , மாநில ஊடக பிரிவு துணை செயலாளர்கள் திரு.இசையரசு, திரு.எழில் இமையன் ஆகியோர் உடனிருந்தனர்.
-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக