அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் 3பேர் பலி: நீதி விசாரணை நடத்தவேண்டும்! - தொல்.திருமாவளவன் அறிக்கை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் பயின்ற வடஇந்திய மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த வட இந்திய மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனை அலுவலகத்தைத் தாக்கியுள்ளனர். இத்தகவலை அறிந்த காவல்துறையினர் அம்மாணவர்களை அப்புறப்படுத்துகிறோம் என்ற பெயரில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் அலறி அடித்துக்கொண்டு தப்பிஓட முயன்ற மாணவர்கள் அருகில் உள்ள ஓடையில் விழுந்து மூழ்கி மூன்று பேர் இறந்துள்ளனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர். அவர்களின் நிலை என்னவென்பதும் இன்னும் உறுதிப்படவில்லை. காவல்துறையின் கட்டுப்பாடிழந்த போக்கால் இந்த அளவில் உயிர்ச்சேதம் நிகழ்ந்துள்ளது. அம்மாணவர்கள் வட இந்தியர்கள் என்பதனால் இந்த அவலத்தை கண்டுகொள்ளாமல் புறந்தள்ளிவிட முடியாது.
நிர்வாகத் திறனிழந்த பல்கலைக் கழகத்தின் அலட்சியப் போக்கும் காவல்துறை யின் மூர்க்கத்தனமும் இந்தப் படுகொலைகளுக்குக் காரணமாகும். எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் இதற்குப் பொறுப்பேற்று கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசு இது தொடர்பாக நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டும். மேலும், தனியார் கல்வி நிறுவனங்களில் தமிழகம் அல்லாத பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து சேரவிரும்பும் மாணவர்களில் சுமார் 5 விழுக்காடு அளவே மாணவர் சேர்க்கையின்போது அனுமதிக்கவேண்டும். இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் வட இந்திய மற்றும் பிற நாடுகளைச் சார்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டால், வட மாநிலங்களிலும் பிற மாநிலங்களிலும் பயில்கிற மாணவர்களும் வெகுவாக பாதிக்கப்படுவர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் காவல்துறையின் அத்துமீறலால் பலியான மாணவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
-

0 கருத்துகள்:
கருத்துரையிடுக