பத்திரிக்கையாளர் சந்திப்பில் விருதுகள் வழங்கும் விழா அறிவிப்பு...

-
தமிழகத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படும் கடன் பற்றி?
தமிழகத்தில் உழைக்கும் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடன்களால் ஏழை மக்கள் பலர் கடன்காரர்களாய் மாறி உள்ளனர். எனவே,அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
***
உழைக்கும் மக்களின் உயர்வுக்காக அயராது உழைத்த உத்தமர்களான புரட்சியாளர் அம்பேத்கர், தந்தைபெரியார், அயோத்திதாசப்பண்டிதர், பெருந்தலைவர் காமராஜர், காயிதேமில்லத் ஆகியோர் வழியில் அரும்பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த ஆண்டு நடத்தப்படும் விருதுகள் வழங்கும் விழாவில்...
அம்பேத்கர் சுடர் : முதல்வர் கருணாநிதி
பெரியார்ஒளி : திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
காமராஜர் கதிர் : திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்
செம்மொழி ஞாயிறு : திரு.மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்
காயிதேமில்லத் பிறை : திரு.கவிக்கோ அப்துல்ரகுமான்
அயோத்திதாசர் ஆதவன் திரு.ஞான அலாய்சியஸ்
ஆகியோருக்கு விருதுகள் வழங்கிப்பாராட்டுவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பெருமைப்படுகிறது என்று தொல்.திருமா அறிவித்தார் .
காமராஜர் கதிர் : திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்
செம்மொழி ஞாயிறு : திரு.மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்
காயிதேமில்லத் பிறை : திரு.கவிக்கோ அப்துல்ரகுமான்
அயோத்திதாசர் ஆதவன் திரு.ஞான அலாய்சியஸ்
ஆகியோருக்கு விருதுகள் வழங்கிப்பாராட்டுவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பெருமைப்படுகிறது என்று தொல்.திருமா அறிவித்தார் .
தற்போது திறக்கப்படவுள்ள சட்டமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை வைக்கவேண்டுமா?
ஆம், ஆந்திர சட்டமன்ற வளாகத்திலும், நாடாளுமன்றவளாகத்திலும் அம்பேத்கர் சிலை வைத்திருக்கிறார்கள்.எனவே, நமது தமிழக சட்டமன்றவளாகத்திலும் அம்பேத்கர் சிலை வைத்தால் சிறப்பை பெறும்.
அம்பேத்கர் சுடர் விருது முதல்வருக்கு தருவதை விட ஒரு தலித் சாதனையாளருக்கு வழங்கலாமே?
தலித்மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும், கல்வி வளர்ச்சிக்கும் பாடுபட்ட ஒரு தலைவர் நம் தமிழக முதல்வர் அவர்கள் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்குவது தான் சாலச்சிறந்தது. அதுவுமன்றி தலித் மக்களுக்கு சேவை புரிந்த தலித் அல்லாதவர்களுக்கு இநத விருது கொடுப்பது அடுத்த தலைமுறை வளர்ச்சிக்கு பேறுதவியாய் இருக்கும் என நம்புகிறேன்.
இந்த சந்திப்பின்போது கட்சியின் பொதுச்செயலாளர் கா.கலைக்கோட்டுதயம், தலைமைநிலையச் செயலாளர்கள் வன்னியரசு, பாவரசு , கவுதமசன்னா ஆகியோர் உடனிருந்தனர்.
-
2 கருத்துகள்:
Dear Brother
I have watch the Function in last two years.So... different with other political leaders. Surely We are support at any time to you.
Thanks
Dharmaraj.J
Udangudi
ஈழ வீடுதலை மற்றும் எழுச்சி, துவக்கம் முதல் இன்று வரை எந்த தொய்வும இல்லாமல்,
தலித்து தலைவன் என்று பெயர் அளவில் இல்லாமல், செயல் மூலம் காண்பிக்கும் தலைவர் அவர்களுக்கு
அஸ்கர் விருது போன்று எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும் உங்கள் விருது
அறிவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை பற்றி பெயர் அளவில் கூட ஏதும் பேசாத தலைவர் திரு கருணாநிதி அவர்களுக்கு, அண்ணல் அம்பேத்கர் விருது ஏற்புடையதுயன்று.
அறிவர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் நினைவுநாள், ஆகிய நட்களிலும் ஒரு செய்தியாக தொலைகாட்சியில் (பொதிகை தொலைகாட்சி தவிர்த்து ) நாங்கள் கண்டது இல்லை.
திரு ஜபார் பட்டேல் அவர்கள் இயக்கிய அறிவர் அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் மிக அருமை. இந்தி மொழியில் கிடைக்கும் இத் திரைப்படம், தமிழில் என்று வரும்? ஆங்கிலத்திலும் இத் திரைப்படம் கிடைக்கவில்லை. அறிவர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் அன்றாவது நல்ல செய்தி வருமா?
சென்ற ஆண்டு பெரியார் விருது இந்த ஆண்டு அம்பேத்கர் விருது
அடுத்த ஆண்டு தலைவர் திரு கருணாநிதி அவர்களுக்கு, தந்தை செல்வா விருதும் கொடுக்கலாம்.
கருத்துரையிடுக