ஏழை எளிய மக்களை கடுமையாக பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை இந்திய அரசு திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்.
-
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொது பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி சென்னை அரசினர் மருத்துவமனை எதிரில் உள்ள மெமோரியல் ஹால் முன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய அரசின் கேவலமான செயல்களையும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் பொறுப்பற்ற செயல்களையும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் அரசியலையும் விமர்சித்து முழக்கங்களை எழுப்பி ஆர்பபாட்டம் நடத்தினர்.
தொல்.திருமாவளவன் அவர்கள் தனது உரையில் இந்திய அரசின் இந்த பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் ஏழை எளிய மக்களின் தலையில் பாராங்கல்லை துாக்கி வைத்தது போல் உள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில் பெட்ரோல் டீசல் விலையால் லாரி உரிமையாளர்களுக்கும் பேருந்து உரிமைய ளர்களுக்கும் தானே பாதிப்பு என நினைப்பார்கள் ஏழை எளிய மக்களுக்கு என்ன பாதிப்பு என வினா எழலாம். ஆனால் உண்மையில் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள் தான், பணக்கார முதலைகள் எதையும் சமாளித்து விடலாம். பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் வாகன சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பார்கள். கட்டணத்தை அதிகரிக்கும் போது பொருட்களின் விலை ஏறும் பொருட்களின் விலைஏறும்போது ஏழை எளிய மக்கள் அல்லல்பட நேரிடும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஏறவில்லை அப்படியிருக்க இவர்கள் ஏன் விலை ஏற்றுகிறார்கள். இங்குள்ள பாமர மக்களுக்கு தங்குவதற்கு இருப்பிடம் இல்லை தற்போது இருக்கும் இருப்பிடத்திற்கும் உத்திரவாதம் இல்லை.அப்படியிருக்க இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நம் இந்தியாவை ஆளும் இந்திய அரசு அணுகுண்டு சோதனை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறிக்கொண்டு வந்தாலும் ஏழை எளிய மக்களையும் அவர் தம் வாழ்க்கை தரம் முன்னேறவும் முயற்சிகள் மேற்கொள்வதில்லை, ஏழை எளிய மக்களையும் கண்டுகொள்வது இல்லை. தற்போது ஏழை எளிய மக்கள் அதிகமாய் பயன்படுத்தும் கத்தரிக்காய், விளையும் இடத்தில் கிடைக்கும் விலையை விட சந்தையில் வாங்கும் போது அதன் விலை அதிகமாகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மேலும் பன் மடங்கு விலை அதிகரிக்க்கும் எனவும் இது ஏழை எளிய மக்களைத்தான மிக கடுமையாக பாதிக்கும். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும் என இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
ஆர்பாட்டாத்தில் பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைச்செல்வம், தலைமைநிலையச் செயலாளர்கள் வன்னியரசு, பாவரசு, மாவட்டச் செயலாளர்கள் இளஞ்செழியன், வீரமுத்து, பாலசிங்கம் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றியப் பொறுப்பாளர்கள் என திரளான விடுதலை சிறுத்தைகள்கட்சியினர் பங்கேற்றனர்.

1 கருத்துகள்:
மதிப்பிற்குரிய தோழர் -அண்ணார் அவர்களுக்கு
வணக்கம் .பெட்ரோல் உயர்வு பற்றி நீங்கள் ,பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் .
யுக பேர வணிகத்தில் இருந்து அத்தியாவசீய பொருட்களை -பருப்பு ,புளி,சக்கரை நீக்க நீங்கள் குரல் கொடுக்க வேண்டும்
அங்கீகரிக்க பட்ட மொழிகளில் -பாராளுமன்றத்தில் -உறு பினர்கள் பேச அனுமதிக்க வேண்டும்
த சேகர்
மருதிபட்டி -அஞ்சல்
அரூர் -வட்டம்
கருத்துரையிடுக