இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் ஐ.நா. தூதரகம் இழுத்து மூடல்
தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்
இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
தொல். திருமாவளவன் அறிக்கை
வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் என்பவரை சிங்கள இனவெறிக் கடற்படையினர் அடித்துப் படுகொலை செய்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இத்தகைய இனவெறிப் படுகொலைகளை சர்வதேசக் கடல் எல்லைப் பகுதிகளைத் தாண்டி வந்து நடத்தி வருகின்றனர். அதன்படி தற்போது இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகில் ஏறி கண்மூடித் தனமாக கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் பலர் காயமுற்றனர். செல்லப்பன் என்பவர் படுகொலையாகியிருக்கிறார். இந்திய அரசு, சிங்களக் கடற்படையின் இத்தகைய அத்துமீறல்களையும் இனவெறிப் படுகொலைகளையும் இதுநாள் வரையில் கண்டிப்பதற்கோ அல்லது தடுத்து நிறுத்துவதற்கோ எத்தகைய முனைப்பையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள ஆட்சியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் போக்கானது ஈழத்தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுகிறது. இந்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
சர்வதேசச் சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசு நடத்திய மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு மூவர் குழுவை நியமித்து ஐ.நா. பேரவை ஆணையிட்டுள்ளது. ஆனால், சர்வதேசச் சமூகத்தையும் ஐ.நா. பேரவையையும் அவமதிக்கும் வகையில் சிங்கள இனவெறி அரசு அந்தக் குழுவுக்கு விசா வழங்க மறுத்திருப்பதுடன் கொழும்பிலுள்ள ஐ.நா. தூதரகத்தையும் இழுத்து மூடியுள்ளது. இவ்வாறு ஐ.நா. பேரவை உள்ளிட்ட சர்வதேசச் சமூகத்தையே இழிவுபடுத்தியுள்ள சிங்கள இனவெறி அரசை எச்சரிக்கும் வகையில் தி.மு.க.வின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்றுப் பாராட்டுகிறது. அத்துடன், மனித உரிமைகளைப் பாதுபாப்பதற்காக மூவர் குழுவை நியமனம் செய்த ஐ.நா. பேரவையின் தூதரகத்தை இழுத்துப் பூட்டிய சிங்கள இனவெறியர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் எதிர்வரும் 12Š.07Š.2010 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழகத்திலிருந்து இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி இலங்கைத் தூதரகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வார்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகளும் தமிழின உணர்வாளர்களும் திரண்டெழுந்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவண்
(தொல். திருமாவளவன்)
1 கருத்துகள்:
அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு !
நாம் சாதியத்தை தீவிரமாய் எதிர்த்தோம் எனவே சாதியத்தை ஆதரித்த தேர்தலையும் புறக்கணித்தோம், எதோ ஓரளவுக்கு நம்மால் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முடிகிறது, ஆனால் ஈழ விடுதலைக்கு கருணாநிதியை நம்புவது தவறான போக்கு தயவு செய்து, தி. மு.க / அ.தி. மு. க. போன்ற ஏமாற்று அரசியலோடு கலந்து, ஈழ விடுதலையை இழப்பதோடு , தலித் விடுதலையையும் இழந்து விட வேண்டாம்,
சோனியா காந்திக்கு வாழ்க கோசம் போடுவதும்
கருணாநிதி ஈழத்திற்காக போராடினார் என்று பழம்பெருமை பேசுவதும்
நான் ஈழ விடுதலையில் சரியாக செல்கிறேன் என்று எங்களை நம்ப வைத்து போராட்டத்தை தூண்டி நாங்கள் மட்டும் தடா, பொடா, அனுபவிக்க செய்வதும், வேண்டாத வேலை,
ஒரு போராளி எப்படி இருப்பான் என்பதுக்கு திருமாவே உதாரணம்
அதே சமயம் ஒரு குசா தூக்கும் அரசியல் வாதி எப்படி இருப்பான் என்பதுக்கு நீங்கள் உதாரணம் ஆகவேண்டாம்,
எப்படி திருமா ஒற்றை உயிர் அல்ல ஒரு இனத்தின் உயிரோ, aப்படிதான் திருமா மரியாதை ஒருவரின் மரியாதை அல்ல ஒரு மாபெரும் தேசிய இனத்தின் மரியாதை,
மனமும் மரியாதையும் புரட்சியலரால் விதைக்கப்பட்டு, தாத்தா இரட்டைமலை சீனிவாசனால், அயோத்தி தசரல், பலரால் வளர்க்கப்பட்டு, திருமாவால் அடைந்து உள்ளோம்,
மீண்டும் திருமா பெயர் கேட்டல் எல்லாம் போய்விடும், கேட்க நாதியில்லாமல் கண்டவன் அடிப்பான்.
கருணாநிதி பேசுவார் அறிவிப்பார் கடிதம் எழுதுவார், நிதி அறிவிப்பார், சாதியத்தை வேரறுக்கவும், தமிழ் ஈழத்தை காக்கவும் அவரால் முடியாது.
ஒன்று திருமா அல்லது யாரேனும் ஒரு தலித் தலைமறைவு போராளியாக பிறக்க வேண்டும்.
எனவே நமது பாதையை செப்பனிடவேண்டும், உங்கள் அரசுக்கு ஆதரவான அறிக்கைகளை சரிசெய்ய வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் போராளிகள் அதில் சந்தேகம் இல்லை ஆனால் சரியான தலைவனும், தளபதிகளும் இல்லாத போர்ப்படை அடிமையாகவே இருக்கும், வரலாற்றில் தலித் ஒரு அடிமை வர்க்கம், திருமாவின் எழுச்சி தலித் விடுதலையின் ஆரம்பம் என்பது மறுக்க முடியாத உண்மை, ஆனால் ஈழ விடுதலையில் அது ஏமாற்றமே.
கருத்துரையிடுக