ஈழச் சிக்கல் தொடர்பாக இந்திய அரசு மேற்கொள்ளும் எந்த முடிவையும் தமிழக அரசை கேட்காமல் எடுக்கக்கூடாது!

விடுதலைச்சிறுத்தைகளின் மாநில நிர்வாகக்குழு தீர்மானங்கள்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் கடந்த 4.7.2010 அன்று மாலை 4 மணியளவில் புதுச்சேரி ‘மாஸ்’ ஓட்டலில் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஈழத்தமிழர்களுக்கு தனித் தாயகம் அமைத்திட வலியுறுத்தியும் தமிழை இந்திய ஆட்சிமொழியாக்க வலியுறுத்தியும் பேசிய எழுச்சித்தமிழரின் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டதற்கு தமிழக முதல்வருக்கு இச்செயற்குழு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
2. ஈழத்தமிழர்கள் சிக்கல் தொடர்பாக இந்திய அரசும் சிங்கள அரசும் இணைந்து எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அல்லது ஒப்பந்தங்களாக இருந்தாலும் தமிழக அரசின் கருத்தைக் கேட்ட பின்னரே அல்லது தமிழக முதல்வரைக் கலந்தாய்வு செய்த பின்னரே அவற்றை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் இடையிலான பாரம்பரிய உறவுகளைக் கருத்தில் கொண்டு ஈழத்தமிழர்கள் தொடர்பாக தமிழக அரசோடு கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டுமே தவிர இந்திய அரசு மட்டும் தனித்து எந்த முடிவையும் மேற்கொள்ளக்கூடாது என்று இந்திய அரசை இச்செயற் குழு கேட்டுக்கொள்கிறது.
3. மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்கவும் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கவும் வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் பரப்புரை இயக்கம் நடத்துவது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
4. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் தேவையற்ற விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது.
5. ஆகத்து 17, எழுச்சித்தமிழர் பிறந்த நாளான தமிழர் எழுச்சி நாளை மிகச் சிறப்பாகவும் எழுச்சியாகவும் தஞ்சையில் நடத்துவதென இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
6. தீவிர உறுப்பினர் சேர்க்கையில் தீர்மானித்த இலக்கை எட்டுவதற்கு மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்று மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

செய்தி
:
வன்னிஅரசு
மாநில செய்திதொடர்பாளர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக