மலையக மக்கள் முன்னணியின் தலைவர் விடுத்துள்ள இறங்கல் செய்தி

அய்யா தொல்காப்பியன் அவர்களின் மறைவிற்கு 
  மலையக மக்கள் முன்னணியின் தலைவர் 
விடுத்துள்ள இறங்கல் செய்தி 


திரு. தொல்.திருமாவளவன்
தலைவர் விடுதலைச்சிறுத்தைகள்
நாடாளுமன்ற உறுப்பினர்

அன்புடையீர்!

தங்களின் அன்புத் தந்தையின் மரண செய்தி கேட்டு கவலையடைந்தேன்.

தாழ்த்தப்பட்டோர் எனக் கூறப்படுவோரின் நலனுக்கான தங்களின் முளுநேர அரசியல் பயணத்தில் தங்களின் அன்புத் தந்தையின் பங்களிப்பும் வழிகாட்டலும், நிச்சயமாக அதிகமாகவே இருந்திருக்கும்.

தங்களின் எழுச்சிமிகு அரசியல் பயணத்தில் சமூகத்திலிருந்து கிடைக்கும் அங்கீகாரத்தை விடவும், குடும்பத்திலிருந்து கிடைக்கும் ஊக்கமும், உற்சாகமும் தான் மிகவும் அர்த்தமுடையதாகவிருக்கும்.

அன்னாரது பிரிவு உங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தாலும் கூட குடும்ப பொறுப்பை மீறிய உங்களின் சமூக கடமை உணர்வு, இந்த இழப்பிலிருந்து உங்களை சீக்கிரமே மீளவைத்துவிடும்.

எல்லாத் தடைகளையும் கடந்து  அரசியல் பணியில் மேலும் பிரகாசிப்பதற்கு தன்னம்பிக்கையும், உறுதியும் உங்களிடம் நிறையவே உள்ளன. 

குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை மலையக மக்கள் முன்னணியின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.


இப்படிக்கு,
திருமதி. சா. சந்திரசேகரன்,
தலைவர் மலையக மக்கள் முன்னணி
இலங்கை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக