தமிழர் இறையாண்மை மாநாடு டிசம்பர் 26க்குத் தள்ளிவைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும்
தமிழர் இறையாண்மை மாநாடு

டிசம்பர் 26க்குத் தள்ளிவைப்பு!
உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவு!
தொல். திருமாவளவன் அறிவிப்பு!

விடுதலைச் சிறுத்தைகளின் உயர்நிலைக் குழுக் கூட்டம் கடந்த 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும், கட்சியின் சார்பில் நடைபெறவுள்ள தமிழர் இறையாண்மை மாநாடு குறித்தும் கூட்டத்தில் விரிவாகக் கலந்தாய்வு செய்யப்பட்டது.


கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்தி வரையறுக்கப்பட்ட இலக்கை அடையும் வகையில் தமிழகம் தழுவிய அளவில் களப்பணியாற்ற வேண்டியுள்ளது. இப்பணிகளுக்கு மாநாட்டுப் பணிகள் இடையூறாக அமைந்துவிடக் கூடாது என்னும் அடிப்படையிலும், மாநாடு தொடர்பாக விரிவாக கருத்துப் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டிய காலத்தேவையின் அடிப்படையிலும் எதிர்வரும் அக்டோபர் 10, 2010 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மாநாட்டை திசம்பர் 26, 2010 அன்று நடத்துவதென கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மாநாட்டுக்கான பணிகளைச் செய்யும் அதே வேளையில் தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகளில் மிகவும் கூடுதலாகக் கவனம் செலுத்தி எதிர்வரும் அக்டோபர் 31க்குள் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களையும் அதற்கான கட்டணங்களையும் தொடர்புடைய பொறுப்பாளர்கள் தலைமையில் ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழர் இறையாண்மை மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டங்களில் தலைமையிலிருந்து அறிவிக்கப்படும் பேச்சாளர்கள் மட்டுமே தமிழகம் தழுவிய அளவில் பங்கேற்க வேண்டுமெனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பது இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இவண்

(தொல். திருமாவளவன்)

2 கருத்துகள்:

decembar 6-kku maatriyirundhaal innum sirappaga irundhurukkum

18 செப்டம்பர், 2010 அன்று 11:39 PM comment-delete

vaazhga valamudan^

18 செப்டம்பர், 2010 அன்று 11:41 PM comment-delete

கருத்துரையிடுக