ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரத்தை உடனே திரும்பறவேண்டும். எழுச்சி தமிழர் வேண்டுகோள்

ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரத்தை உடனே திரும்பறவேண்டும்.
சிறைப்பட்ட அனைவரையும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் 15 வயதிற்கு  கீழே உள்ள இளைஞர்கள் அனைவரையும் விடுதலைச் செய்ய வேண்டும்.

காஷ்மீர் சென்று திரும்பிய திருமா வேண்டுகோள்  


மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு 20.09.2010 காலை காஷ்மீர் சென்றது.

காஷ்மீர் மாநிலத்தில், ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர்.



இந்த கலவரத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலைகளை நேரில் கண்டறிந்து அதன் அடிப்படையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அங்கு அனைத்துக்கட்சி குழு ஒன்றை அனுப்பி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில், பாரதீய ஜனதா தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் மற்றும் ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), சரத்யாதவ் (ஐக்கிய ஜனதாதளம்), ராஜ்நிதி பிரசாத் (ராஷ்டிரீய ஜனதாதளம்), பாசுதேவ் ஆச்சார்யா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்டு), டி.ஆர்.பாலு (தி.மு.க.), தம்பிதுரை (அ.தி.மு.க.) உள்ளிட்ட 38 பேர் கொண்ட குழுவினர்  20.09.2010 (திங்கட்கிழமை) டெல்லியில் இருந்து காஷ்மீர் சென்றனர்.

2 நாள் பயணமாக காஷ்மீர் சென்ற இந்த குழுவினர் அங்கு, வர்த்தக சங்க பிரதிநிதிகள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து பேசி மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகள் பற்றிய அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்தனர்.

இக்குழுவில் இடம்பெற்று அங்குள்ள நிலைமைகளை கண்டறிந்து வந்த எழுச்சி தமிழர் தெரிவித்தவை....

விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நானும் இக்குழுவில் இடம் பெற்றேன் 20ஆம் தேதி புதுதில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்றோம் அங்கு செரி காஸ்மீர் இன்டர்நெஷனல் கான்பரன்ஸ் சென்டர் என்ற இடத்தில் பொதுமக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன . உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் தலைமையில் சென்றிருந்த பாரளுமன்ற கட்சித்தலைவர்கள் அனைவரும் கூடினோம். காஷ்மீர் தலைவர்கள், வணிகர்கள் பழங்குடி இனத்தை சார்ந்த பல்வேறு பிரிவினர் பள்ளிகல்லூரி மாணவர்கள், பல்கலைகழக பேராசிரியர்கள்,  துணைவேந்தர்கள் இப்படி பலதரப்பை சார்ந்தவர்களும் அந்த அமர்வில் கலந்துகொண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கு  பகுதியில் நடந்துவருகிற சிக்கல்கள் குறித்து பேசினோம்.

ஏறத்தாழ 10 மணிநேரம் அந்த சந்திப்பு நடந்தது காங்கிரஸ் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி போன்ற ஒரு சில கட்சிகளை தவிர பாரதிய ஜனதா  சிவசேனா போன்ற கட்சிகளை தவிர பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் கட்சிசாராத அமைப்புகள் பழங்குடி சமூகத்தை சார்ந்த மக்கள் இன்று பலரும் அந்த பயணக்குழுவிடம் காஷ்மீர்; மாநிலத்தில் ஒரு நிலையான அமைதியை உருவாக்கவேண்டுமானால் 1947 ஆம் ஆண்டு இந்திய அரசு காஷ்மீர்; ; மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். எங்களுக்கு வேறு எந்த பொருளாதார உதவியோ அல்லது தொழில் வளர்ச்சியோ தேவை இல்லை எங்கள் மண்ணை எங்களுக்கு விடுங்கள் என்கின்ற அடிப்படையில் கருத்துகளை முன்வைத்தார்கள் ஒரு சிலர் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார்கள் நேரு என்ன சொன்னார் நரசிம்ம ராவ் பிரதமார இருந்த போது என்ன சொன்னார் ஆனால இங்கு வந்தால் ஒன்று பேசுவது இந்தியாவிற்கு போனால் வேறுஒன்று பேசுவதும் இந்திய பிரதமர்கள் தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்றெல்லாம் இந்தியா  வேறு காஷ்மீர்; வேறு என்கின்ற கருத்தை உறுதிபடுத்தும் வகையில் கருத்துகளை பேசினார்கள்

பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும் என்கிற அடிப்படையில் அடுத்த நாள் காலையில் ஹெலிகாப்டர் ;மூலம் ஸ்ரீநரில் இருந்து டெல்மார்க் என்ற இடத்தில் போய் இறங்கினோம் அங்கு இருந்து தரைவழியாக n;;டன்மார்க் என்ற இன்னொரு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டோம் அந்த பகுதி வன்முறையால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது ஒரு உணவு விடுதி முழுமையாக எரிக்கப்பட்டிருந்தது  . குட்டி சுவரை தவிர வேறு எதுவும் அங்கு இல்லை ஊரடங்கு உத்தரவு இருப்பதால் மக்கள் நடமாட்டமே இல்லை கடைகள் எல்லாம் மூடிக்கிடக்கிறது. பேருந்து நிலையங்கள் வெரிச்சோடி கிடந்தன இருந்தாலும் அங்கு இருந்து ஆள்பைன் என்ற சூற்றுலா விடுதியில் 100 பேரை அழைத்து வந்திருந்தார்கள்.

அவர்கள் இடத்திலே திரு.ப.சிதம்பரம் தலைமையிலான பாரளுமன்ற கட்சி குழுவிடம் சொல்லுவதை சொல்லலாம் ஒரு சந்திப்பு நடந்தது அவர்களும் தங்களுடைய கருத்துகளை சொன்னார்கள்  முதலில் இராணுவத்தை  இங்கு இருந்து திரும்பப்பெறவேண்டும் ஆள்தூக்கி சட்டமான ஆயுதப்படையினருக்கு அதிகார வழங்குகிற சட்டத்தை திரும்ப பெறவேண்டும். கைதுசெய்யப்பட்ட அனைவரையும் விடுதலைச் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை எல்லாம் முன்வைத்தார்கள். அந்த சந்திப்பை முடித்துக்கொண்டு 21ந்தேதி மீண்டும் ஸ்ரீநரில் இருந்து ஜம்முவுக்கு கிளம்பினோம். ஜம்மு என்பது இந்துக்கள் அதிகமாக வாழும்பகுதி அங்கே இந்த கலவரம் நடக்கவில்லை என்பதானால் ஊரடங்கு உத்தரவு ஏதுமில்லை சுமுகமான சூழல் நிலவியது அங்கு முதலமைச்சர் உமர் அப்துல்லா இல்லத்தில் பொதுமக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தால் அவருடைய  இல்லத்தில் இருந்த ஒரு மன்றத்தில் பொதுமக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுருந்தன. மூன்று மணிக்கு தொடங்கிய சந்திப்பு ஏறத்தாழ 10 மணிவரை நடத்திக்கொண்டே இருந்தார்கள். அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி சாராத அமைப்பபுகளின் நிர்வாகிகள், கல்லூரி பள்ளி மாணவர்கள், பேராசியர்கள், துனைவேந்தர்கள் என்று பலரும் வந்திருந்தார்கள். ஜம்மு பகுதியை பொருத்தவரையில் இந்தியா வேறு ஜம்மு வேறு என்ற கருத்துகள் யாரும் வெளிப்படுத்தவில்லை. ஜம்முவை இந்திய அரசு புறக்கணிக்கிறது காஷ்மீருக்கு கொடுக்கின்ற முக்கியதுவத்தை ஜம்முவுக்கு அளிக்கவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார்கள். ஆகவே இந்திய அரசு பொருளாதாரரீதியாக  ஜம்மு பகுதியை மேம்படுத்தவும் லடாக் பகுதியை மேம்படுத்துவதற்கும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று அழுத்தமாக வெளிப்படுத்தினார்கள். ப.சிதம்பரம் அவர்கள் தலைமையில் சென்ற இந்த பாரளுமன்ற கட்சி தலைவர்கள் குழுவில் ஒரு சிலர் தனியே மூன்று குழுக்கலாக பிரிந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தனிநாடக அறிவிக்க வேண்டும் என்று போராடி கொண்டிருக்கின்ற அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து வந்தார்கள் ஸ்ரீநகரில் இருந்தபோது அதாவது குரியத்  அமைப்புகளின் தலைவர் கிலானி அவர்களையும் ஜம்மு காஷ்மீர் விடுதலைமுன்னணி தலைவர் யாசின் மாலிக் அவர்களையும் அதைபோல இன்னோரு அமைப்பின் தலைவர் உமர் பாரூக் அவர்களையும் சந்தித்துவந்தார்கள் இந்த சந்திப்பை சிவசேனா பாரதிய  சனதா அமைப்பை சார்ந்தவர்கள் ஜம்முவிலேயே  கடுமையாக கண்டித்தார்கள் இந்திய அரசின் ஒப்புதலோடு  பிரிவினைவாதிகளை சந்திப்பதற்காக தான் இந்த குழுவந்நதா ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனி 1000ரூபாய் நோட்டு அச்சிட்டு விட்டுருக்கின்ற கிலானியை எப்படி சந்திக்கலாம் ஆக ;ஜம்முவுக்கும் காஷ்மீருக்கும் இடையிலே முரண்பாடு வலுவாக இருக்கிறது என்று நன்றாக உணரமுடிந்தது.  இந்த இரண்டு நாள் சந்திப்பில் ஜம்முகாஷமீர் மக்களின் உணர்வுகளை நிலைகளையும் அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்பு ஏற்பட்டது 23 ஆம் தேதி புதுதில்லியில் ப.சிதம்பரம் ; தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில்  விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் சில கருத்துகளை  முன்வைத்தேன் அந்த ஆள்த்தூக்கி சட்டமான ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரத்தை உடனே திரும்பறவேண்டும் சிறைப்பட்ட அனைவரையும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் 15 வயதிற்கு  கீழே உள்ள இளைஞர்கள் அனைவரையும் விடுதலைச் செய்ய வேண்டும், பிரிவினைவாத சக்திகள் என்று சொல்லப்பட்டாலும் கூட அவர்களோடு அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்;ஆகவே அவர்களோடு உடனடியாக ஒரு பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யவேண்டும் என்று நான் இந்த அறிக்கையை தயாரிக்கின்ற கலந்தாய்வு கூட்டதில் பேசினேன். காஷ்மீர் பகுதியை சார்ந்த மக்கள் நாங்கள் இந்தியர் அல்ல என்ற உணர்வுதான் மேலோங்கி இருக்கிறது அந்த மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப பிரச்சனையை இந்திய அரசு அனுகாதவகையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு இல்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக