நெய்வேலி தொழிலாளர்கள் பிரச்சனை: அக். 18ந்தேதி நெய்வேலியில் விடுதலைச் சிறுத்தைகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்தரம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் வலிமையாக நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்க அமைப்புகளும் கட்சி சாராத தொழிற்சங்க அமைப்புகளும் ஒருங்கிணைந்து அறவழியில் வெற்றிகரமாக இப்போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 10-10-2010ஆம் நாள் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் மட்டும் நிர்வாகத்துடன், ரூ. 1,040 ஊதிய உயர்வு என்கிற அளவில் உடன்பட்டு ஒப்பந்தத்தில் கையயாப்பமிட்டுள்ளது. எனினும் பெரும்பான்மையான தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் இந்த ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை. தொடர்ந்து வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஆளும் கட்சிக்கு எதிரான பிற கட்சிகளின் தொழிற்சங்கங்கள் தனியாகவும், ஆளும் கட்சியின் தொழிற்சங்கங்கள் தனியாகவும் இயங்கி வருகிற நிலை ஏற்பட்டுள்ளதால் இவ்வாறான அணி அரசியல் சார்பின்றி விடுதலைச் சிறுத்தைகளின் தொழிற்சங்கமான தொழிலாளர் விடுதலை முன்னணி பெரும்பான்மையான தொழிலாளர்களின் விருப்பத்திற்கேற்பவும், உடனடியாக மத்திய அரசு தலையிட்டு சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் தனித்துப் போராடி வருகிறது.
ஏற்கனவே 8-10-2010, 12-10-2010 ஆகிய தேதிகளில், இப்பிரச்சனைக்காகத் தொழிலாளர் விடுதலை முன்னணி இரண்டு போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 18-10-2010 அன்று தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் எனது (தொல். திருமாவளவன்) தலைமையில் நெய்வேலி மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகில் மாலை 3 மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களும், அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், முகாம் நிர்வாகிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
ஏனைய தொழிற்சங்கங்கள் வரும் 19-10-2010 அன்று அழைப்பு விடுத்துள்ள கடையடைப்புப் பேரராட்டத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணி கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் அதிமுக தொழிற்சங்கத்தின் தலைமையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சனையை அரசியலாக்கி போராட்டத்தை மாநில அரசுக்கு எதிராக திசை திருப்ப முயற்சிக்கின்றனர். இந்திய அரசு இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட வேண்டுமென்று தமிழக முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் ஒப்பந்தத்தில் கையயழுத்திட்டிருந்தாலும் பெரும்பான்மையான தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து கோரிக்கைகளில் உள்ள ஞாயத்தை மதித்து தமிழக முதல்வர் அவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத் தகுந்ததாகும். சுமூகமான முறையில் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தமிழக முதல்வர் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில் இதனை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சிப்பதாகவே விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது. எனவே 19Š10Š2010 அன்று நடைபெறும் கடையடைப்புப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளும், தொழிலாளர் விடுதலை முன்னணியும் கலந்துகொள்ளாது எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
(தொல்.திருமாவளவன்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக