நெய்வேலியில் இன்று திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில்நெய்வேலியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து திருமாவளவன் நேற்று முன் தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் வலிமையாக நடைபெற்று வருகிறது. அனைத்துக்கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்க அமைப்புகளும் கட்சி சாராத தொழிற்சங்க அமைப்புகளும் ஒருங்கிணைந்து அறவழியில் வெற்றிகரமாக இப்போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 10-ந்தேதி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மட்டும் நிர்வாகத்துடன், ரூ.1,040 ஊதிய உயர்வு என்கிற அளவில் உடன்பட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
எனினும் பெரும்பான்மையான தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் இந்த ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை. தொடர்ந்து வேலை நிறுத்தம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் ஆளும் கட்சிக்கு எதிரான பிற கட்சிகளின் தொழிற்சங்கங்கள் தனியாகவும், ஆளும் கட்சியின் தொழிற்சங்கங்கள் தனியாகவும் இயங்கி வருகிற நிலை ஏற்பட்டுள்ளதால் இவ்வாறான அணி அரசியல் சார் பின்றி விடுதலைச்சிறுத்தைகளின் தொழிற்சங்கமான தொழிலாளர் விடுதலை முன்னணி பெரும்பான்மையான தொழிலாளர்களின் விருப்பத்திற்கேற்பவும், உடனடியாக மத்திய அரசு தலையிட்டு சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் தனித்துப்போராடி வருகிறது.
நாளை (18-ந்தேதி) தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் எனது தலைமையில் நெய்வேலி மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் அருகில் மாலை 3 மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஒப்பந்தத் தொழிலாளர்களும், அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், முகாம் நிர்வாகிகளும் விடுதலை சிறுத்தைகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
ஏனைய தொழிற்சங்கங்கள் வரும் 19-ந்தேதி அழைப்பு விடுத்துள்ள கடை அடைப்பு போராட்டத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணி கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் அ.தி.மு.க. தொழிற்சங்கத்தின் தலைமையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சினையை அரசியலாக்கி போராட்டத்தை மாநில அரசுக்கு எதிராக திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
இந்திய அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டுமென்று தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டிருந்தாலும் பெரும் பான்மையான தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து கோரிக்கைகளில் உள்ள ஞாயத்தை மதித்து தமிழக முதல்வர் பிரதமருக்குக்கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத் தகுந்ததாகும்.
சுமூகமான முறையில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழக முதல்வர் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் இதனை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சிப்பதாகவே விடுதலைச்சிறுத்தைகள் கருதுகிறது. எனவே 19-ந்தேதி நடைபெறும் கடை அடைப்பு போராட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகளும், தொழிலாளர் விடுதலை முன்னணியும் கலந்து கொள்ளாது என தெரிவித்துக் கொள்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக