- ராஜி முத்து, அட்லாண்டா விடியல் காலையில்
சேவல் கூவியது
தொலைக்காட்சியில் ஒலிக்கும்
சுப்ரபாரத்தைக் கேட்டு!
*
குழப்பம் குழந்தை புரியாமல்
பார்த்தது
தாத்தாவும், பாட்டியும்
முத்தம் கேட்டதற்கு
வெப்காம் வழியாக!
*
முரண்பாடு மாந்தோப்பை
அழித்து
புதிய ஆராய்ச்சி வளாகம்
புவி
வெப்பமயமாவதை தடுக்க
*
மாக்கோலம் பெயின்டர் வந்தார்
வாசலில்
கோலம் போட
நிரந்தரமாக..
*
கோயில் ஞாயிற்றுக்கிழமை கோயில்
செல்ல வேண்டும்
புதன்கிழமை
முடிந்த தீபாவளிக்காக!
*
|
0 கருத்துகள்:
கருத்துரையிடுக