லோட்டஸ் கல்லூரியின் தீண்டாமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: 160 பேர் கைது

திருச்சியில் அண்ணா சிலை முன்பு தலித் கிருஸ்துவர்களும், பெரியார் திராவிட கழகத்தினரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஸ்துவ அமைப்புகளும் கலந்துகொண்டன.


லோட்டஸ் கல்லூரி நிர்வாகத்தின் தீண்டாமை போக்கை கைவிடக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் தடை விதித்திருந்தது.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்ததால் போலீசார் ஆர்ப்பாட்டத்தை பாதியில் நிறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கண்டன கோஷம் எழுதப்பட்ட தட்டிகளை கைப்பற்றினர்.
ஆண்கள்- பெண்கள் உட்பட 160 பேரை கைது செய்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக