வெளியீட்டு விழா
அன்புடையீர், வணக்கம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் "தொல்.திருமாவளவன் கவிதைகள்' நூலின் ஆங்கில மொழியாக்கம் 'Thirst', வெளியீட்டு மையம் சார்பாக மாநில செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு தொகுத்த தொல். திருமாவளவன் உரைத் தொகுப்பு நூல் "ஈழ விடுதலைக்களம்', தமிழர் இறையாண்மை மாநாட்டுச் சிறப்புப் பாடல் இசைவட்டு "எழுச்சித் தமிழ்' ஆகியவற்றின் வெளியீட்டு விழா, வெளியீட்டு மையம் சார்பாக, சென்னை, அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்திலுள்ள அரங்கத்தில், 26.11.2010 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.
விழாவிற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார்.
"ஈழ விடுதலைக் களம்' உரைத் தொகுப்பின் முதல் படியை பாவலர் இன்குலாப் வெளியிட, பாவலர் தணிகைச்செல்வன் பெற்றுக்கொள்கிறார். 'Thirst' ஆங்கில மொழியாக்க கவிதை நூலை கவிக்கோ அப்துல் ரகுமான் வெளியிட, பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பெற்றுக்கொள்கிறார். "எழுச்சித் தமிழ்' இசைவட்டை பாவலர் அறிவுமதி வெளியிட, இயக்குநர் அமீர் பெற்றுக்கொள்கிறார். நீதியரசர் கனகராஜ், எழுத்தாளர் இரவிக்குமார், கவிஞர் சல்மா, கவிஞர் இனிமை ஆகியோர் கருத்துரையாற்றுகிறார்கள். வெளியீட்டு மையம் மாநிலச் செயலாளர் ஆதிரை நன்றியுரையாற்றுகிறார்.
விழாவை மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு, தலைவரின் தனிச்செயலாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் ச.வெற்றிச்செல்வன், மாநில நிர்வாகிகள் இரா.செல்வம், ம.சங்கத்தமிழன், சைதை பாலாஜி ஆகியோர் ஒருங்கிணைப்புச் செய்துள்ளனர்.
இப்படிக்கு
வன்னிஅரசு
மாநிலச் செய்தித் தொடர்பாளர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக