தமிழகத்தில் கடும் மழை, வெள்ள பாதிப்பு: இயற்கைப் பேரிடர் நிதியிலிருந்து ரூ. 2000 கோடி வழங்க மத்திய அரசை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் 7ந்தேதி ஆர்ப்பாட்டம்! தொல்.திருமாவளவன் அறிவிப்பு

கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கடும் மழை பெய்துவருவதால் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கால்நடைகளும் பல்லாயிரக்கணக்கில் மடிந்துள்ளன. நெல், வாழை உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் பாழாகியுள்ளன. தோட்டப் பயிர்களும் கடுமையாக நாசமாகியுள்ளன. இந்நிலையில் தமிழக அரசு உடனடி நிவாரணப் பணிகளுக்கென ரூ. 100 கோடியை முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த இழப்பீட்டுத் தொகையின் அளவை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2 இலட்சமாகவும், வீடு இழந்தோருக்கு

 ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 5 ஆயிரமாகவும், விவசாயப் பாதிப்புகளுக்கு ஒரு யஹக்டேருக்கு

ரூ. 4 ஆயிரத்திலிருந்து ரூ. 7,500ஆகவும் உயிர்த்தி வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இயற்கைப் பேரிடர்களிலிருந்து மக்களை மீட்கவும் இழப்பீடு வழங்கவுமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுவரும் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வெகுவாகப் பாராட்டுகிறது.

தமிழகம் இத்தகைய கடுமையான பாதிப்புக்குள்ளான சூழலில் இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இந்திய அரசு, நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ. 2000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும் ஏற்பட்டுள்ள மழைŠவெள்ள பாதிப்புகளை நேரிலே பார்வையிடுவதற்கு இந்திய அமைச்சர் தலைமையில் குழு ஒன்றை இந்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும்.

வழக்கமாக தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை பத்தில் ஒரு மடங்குக்கும் குறைவாகவே இந்திய அரசு வழங்கிவருகிறது. மற்ற மாநில அரசுகளுக்கு இவ்வாறான சூழ்நிலையின்போது வழங்கப்படுகிற நிதியை ஒப்பிடும்போது தமிழகத்தை இந்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில் அணுகுவதாகவே தெரிகிறது.

தற்போது நிகழ்ந்துள்ள கடுமையான மழை, வெள்ள பாதிப்பிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்கும் வகையில் போதிய நிதியை உடனடியாக வழங்க முன்வரவேண்டும் என்றும் முதற்கட்ட நிதியாக ரூ. 2000 கோடி வழங்க வலியுறுத்தியும் எதிர்வரும் 7Š12Š2010 அன்று சென்னையிலும், 8Š12Š2010 அன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற மாவட்டங்கள் அனைத்திலும் இந்திய அரசை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் இவ்வார்ப்பாட்டம் கட்சித் தலைவர் என்கிற முறையில் எனது (தொல். திருமாவளவன்) தலைமையிலும் பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் தலைமையிலும் நடைபெறும்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக