மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்வையிடும் எம்.பி

சிதம்பரம்,டிச.4-

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்ட ணியில் புதிய கட்சிகள் வந்தால் விடுதலை சிறுத்தைகள் வரவேற் போம் என்று சிதம் பரத்தில் திருமா வளவன் கூறினார்.

மழை வெள்ள பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தாலுகா பகுதிகள் கடுமை யாக பாதிக்கப்பட்டது.ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி வெளியேற்றப்பட்ட நீரால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.

இந்த வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார். அதையடுத்து அவர் அண்ணாமலை பல்கலைக் கழக விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார்.


அப்போது அவர் கூறிய தாவது:-

கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங் களில் பெய்த கன மழையினால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த வெள்ளத்தில் சுமார் 15 பேர் பலியாகி உள்ளனர்.வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட குடிசை களுக்கு ரூ.2 ஆயிரம் இழப் பீட்டு தொகையில் இருந்து ரூ.5 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கையை ஏற்று இந்த தொகையை உயர்த்திய தமிழக முதல்- அமைச்சருக்கு நன்றி தெரி வித்துக்கொள்கிறேன்.

அதேபோல் எக்டேருக்கு ரூ.4 ஆயிரம் இழப்பீட்டு தொகையில் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 ஆக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.இதை ரூ.15 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக தமிழக அரசு உயர்த்தி வழங்குவது ஆறுதல் அளிக்கிறது.பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதம் வழங்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.ஆனால் மத்திய அரசு 25 சதவீதம் அளவு கூட வழங்க வில்லை.ஆகவே மத்திய அரசின் 75 சதவீத நிதியை இந்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

கரைகளை பலப்படுத்த வேண்டும்

இதுதொடர்பாக பிரதமர், நிதி மந்திரி ஆகியோரை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனு கொடுக்க உள்ளோம்.சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை தாழ்வான பகுதி என்பதால் வெள்ளம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.இதை அரசு சிறப்பு கவனம் செலுத்தி உரிய திட்டங்களை நடைமுறை படுத்த வேண்டும். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விட வேண்டும். வீராணம் ஏரியின் கருவாட்டு ஓடை திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

கொள்ளிடம், வெள்ளாறு, பழைய கொள்ளிடம், கான் சாகிப் வாய்க்கால், பாசி முத் தான் ஓடை , பாழ்வாய்க்காÛல் ஆகியவற்றை தூர்வாரி , ஆழப்படுத்த வேண்டும்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பூலாமேடு, காட்டுக்கூடலூர், தவர்த்தாம்பட்டு, வன்னிïர் ஆகிய இடங்களில் புயல் பாதுகாப்பு மையம் அமைக்கப் பட வேண்டும்.நந்திமங்கலம், திருநாரைïர் ஆகிய பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து தலா ரூ.65 லட்சம் செலவில் புயல் பாதுகாப்பு மையம் அமைக் கப்பட்டுள்ளது.மீனவர்கள் கடல் கொந்தளிப்பால் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர்.அவர்களுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்க வேண்டும்.

வெற்றிலை கொடிகாலுக்கும் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். காய்கறிகள், முருங்கை, பூ வகைகள் போன்ற தோட்டக்கலை பயிருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.தற்போது சிதம்பரம், காட்டு மன்னார்கோவில், புவனகிரி ஆகிய தொகுதிகளில் வெள்ள சேதங்களை பார்வையிடுகிறேன். நாளை (இன்று) அரியலூர், ஜெயங் கொண்டம் பகுதிகளை பார்வையிடுகிறேன். மீண்டும் வருகிற 7, 8-ந் தேதிகளிலும் வெள்ள சேதங்களை பார்வையிடுகிறேன்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை வென்று எடுப்போம்.கடந்த 6 மாதமாக தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.இதில் 42 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர். இதில் ஆதிதிரா விடர்கள் அல்லாதவர்கள் 151/2 லட்சம் பேர் உள்ளனர். வருகிற 26-ந் தேதி சென்னையில் தமிழர் இறையாண்மை மாநாடு நடக்கிறது.தமிழர்களுக்கென தாயகம் வேண்டும்.தமிழ் இனம் தேசிய இனமாக அங்கீகாரம் வேண்டும்.தன்னாட்சி உரிமை பெற வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

தி.மு.க.கூட்டணியில் புதிய கட்சிகள் வந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்போம்.இருப்பினும் அதற்கான முடிவை தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதி தான் முடிவு செய்வார்.கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு திருமாவளவன் எம்.பி. பேசினார்.

அதையடுத்து கொடிப் பள்ளம், மடுவங்கரை, காட்டுக் கூடலூர், வைïர் போன்ற சிதம்பரம், புவனகிரி, காட்டு மன்னார்கோவில் ஆகிய தாலுகா பகுதியில் வெள்ள சேதங்களை திருமாவளவன் எம்.பி.பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார்.அவருடன் ரவிக்குமார் எம்.எல்.ஏ., இளஞ்சிறுத்தை கள் எழுச்சிப்பாசறை மாநில துணை செயலாளர் தாமரைச் செல்வன்,அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில இணை செயலாளர் காவியச் செல்வன், மாவட்ட செயலாளர் திருமாறன், துணை செயலாளர் கள் செல்லப்பன், கதிரவன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட செயலாளர் பால.அறவாழி, செல்வமணி, கோவி.பாவாணன், பாலசிங் கம், செந்தில் ,ஒன்றிய செயலா ளர் சுதாகர், இளம்வழுதி, ரமேஷ், முத்தையன், சந்தான கிருஷ்ணன், கணேஷ், ஸ்டாலின், பன்னீர்செல்வம், தியாகு உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் சென்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக