மீனவர் ஜெயகுமார் சிங்களக் கடற்படையால் படுகொலை இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகை 500 பேர் கைது


தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், கடந்த 10 நாட்களுக்கும் 2 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழின விரோத நடவடிக்கைகளில் இலங்கை அரசுக்குத் துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இன்று (25.Š01.Š2011) காலை 11.00 மணியளவில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கா. கலைக்கோட்டுதயம், பொருளாளர் முகமது யூசுப், மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு முன்னிலை வகித்தனர்.

டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாடமி அருகிலிருந்து இலங்கைத் தூதரகம் நோக்கி பேரணியாக தொண்டர்கள் சென்றனர். பேரணியில் இராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. "தடுத்து நிறுத்து தடுத்து நிறுத்து மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்து! அப்புறப்படுத்து அப்புறப்படுத்து இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்து!' ஆகிய முழக்கங்களை எழுப்பியபடி சென்ற தொண்டர்களை இலங்கைத் தூதரகம் அருகில் காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். தொடர்ந்து அணி அணியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தபடி தொண்டர்கள் கைதாயினர்.

போராட்டத்தில் எழுஞ்சிறுத்தை திலீபன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், ந. இளஞ்செழியன், இரா. செல்வம், யாழினி, ஆ. விடுதலைச்செல்வன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


இவண்

வன்னிஅரசு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக