நெமிலி கோமகன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி


மறைந்த விடுதலை சிறுத்தைகள் காஞ்சீபுரம் மாவட்ட செய்தி தொடர்பாளர் நெமிலி கோமகன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் வீர வணக்க பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் இன்று (26.01.2011) நடைபெற்றது. மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் நெமிலி மேனகாதேவி கோமகன் வரவேற்றார்.

மாநில நிர்வாகிகள் வன்னியரசு, கவுதம் சன்னா, பார்வேந்தன், சிந்தனை செல்வன், கலைகோட்டுதயம், முகமது யூசுப், வல்லரசு, பாவரசு,  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு மறைந்த கோமகன் திருவுருவ சிலையை திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

2011 விடுதலை சிறுத்தைகள் ஆண்டு என நாம் அறிவித்து இருந்தோம். தற்போது அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் யார் ஆட்சி அமைந்தாலும் மிக பெரிய பலமான கட்சியாக நம் கட்சி தோல் கொடுக்கிறது. வரும் காலங்களில் அரசியல் ஆட்சி அதிகாரத்தில் நமது பங்கு வேண்டும். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். நம் கட்சி அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும். அதற்கு 75 சதவீத வாக்குகள் நம் கட்சி பெற வேண்டும். நமது கட்சிக்கு அனைத்து பகுதிகளிலும் உறுப்பினர்களை வெகுவாக சேகரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி அல்லாத கிராமமே இல்லாமல் அனைத்து கிராமத்திலும் நம் கட்சி கொடி ஏற்றி கட்சியை பலப்படுத்த வேண்டும். நமது கட்சியின் அசுரவேக வளர்ச்சியை கண்டு மற்ற கட்சி தலைவர்கள் மிரண்டு போய் உள்ளனர்.இவ்வாறு தலைவர் திருமா பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் புரட்சிதாசன், இளவளவன், எழிலரசு, தென்னவன், அம்பேத்கார் வளவன், பூவிழி, கிட்டு, கருமா கலைவடிவன், மூங்கிலான், சுடர்வளவன், தினகரன், முத்தமிழன், பாவளன், சத்தியா, வனங்காமுடி, செல்வம், தமிழ்வாணன், உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தொழிலாளர் விடுதலை முன்னணி துணை செயலாளர் சமத்துவன், கோவளவன், தமிழ்மகன் ஆகியோர் நன்றி கூறினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக