புத்தக கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சி நேற்று(4-1-2011) தொடங்கியது. இது 34வது புத்தகக் கண்காட்சியாகும்.
34வது கண்காட்சி பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
இப்புத்தக கண்காட்சியில் விடுதலைச் சிறுத்தைகளின் ”தாய்மண் வெளியீட்டகம்” கடை எண் 263 & 264 அமைந்துள்ளது. இதில் விடுதலைச் சிறுத்தைகளின் வெளியீடுகள் அனைத்தும் கிடைக்கும்.


கண்காட்சி தினசரி பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை இருக்கும். 17ம் தேதி கண்காட்சி நிறைவு பெறும்.
புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு. நுழைவுக்கட்டணம் ரூ.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 12 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு கட்டணம் கிடையாது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் கட்டணம் கிடையாது. ஆனால் அதற்கான இலவச அனுமதி சீட்டுகள் 5 லட்சம் அச்சடித்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கப்பட உள்ளன.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக