தமிழ் மக்கள், தமிழ் மண்ணுக்காக போராடி, வாதாடி வரும் இயக்கம் தான் விசிக
பிப்-10 புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் புரட்சியாளர் அம்பேத்கார் தொழிலாளர் விடுதலை முன்ண்க்ஷ்ட்ஃப் சார்பில் கொடி ஏற்று விழா நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு கொடி ஏற்றிவைத்து பேசினார். அவர் கூறியதாவது:-
தமிழ் மக்கள், தமிழ் மண்ணுக்காக போராடி, வாதாடி வரும் இயக்கம் தான் இந்த இயக்கம் இது தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. நாங்கள் தொழிலாளர் உரிமைக்காக போராடி வருகிறோம். தேர்தல் நெருங்கிவிட்ட சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் உள்ளோம் என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி உள்ளோம்.
விடுதலை சிறுத்தைக்கு 230 தொகுதிகளிலும் ஓட்டு வங்கி உள்ளது. 120 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும சக்தியாக உள்ளோம். எனவே விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் தேர்தல் முடிவை தீர்மானிக்க முடியாது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். மற்றொரு தொகுதியில் 2 ஆயிரம் ஓட்டுக்களில் மட்டுமே தோல்வி அடைந்தோம். 2 தொகுதியிலும் வெற்றி பெற்று இருந்தால் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைத்து இருக்கும்.
வருகிற சட்டசபை தேர்தலில் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைக்க அதிக தொகுதிகளை கேட்போம். இந்த தேர்தலில் தி.மு.க.கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இந்த 2011-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் ஆண்டாக அமையும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக